பசங்க அழுதா நான் வருவேன்..! சைக்கோ கொலைகாரனாக பிரபுதேவா மிரட்டி இருக்கும் பஹீரா ட்ரைலர்..!

Published : Oct 08, 2021, 07:47 PM IST
பசங்க அழுதா நான் வருவேன்..! சைக்கோ கொலைகாரனாக பிரபுதேவா மிரட்டி இருக்கும் பஹீரா ட்ரைலர்..!

சுருக்கம்

இயக்குனர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள 'பஹீரா' படத்தின் மிரட்டலான ட்ரைலர் தற்போது  வெளியாகியுள்ளது.  

இயக்குனர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள 'பஹீரா' படத்தின் மிரட்டலான ட்ரைலர் தற்போது  வெளியாகியுள்ளது.

'த்ரிஷா இல்லனா நயன்தாரா',  'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் முதல் முறையாக, பிரபு தேவாவை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'பஹீரா'. படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து, விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் இந்தப் படத்தின் ட்ரைலரை தற்போது வெளியாகி மிரட்டியுள்ளது.

பல பெண்களை அப்பாவி போல் நடித்து திருமணம் செய்தோ... அல்லது அவர்களை காதலித்தோ கற்பழித்து கொலை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனாக பிரபு தேவா நடித்துள்ளார். இந்த ட்ரைலர் ஒவ்வொரு காட்சிகளும் அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தில் கூடுதல் இளமையோடு 10 க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் தோன்றியுள்ளார். குறிப்பாக பெண் கெட்டப்பையும் விட்டுவைக்கவில்லை பிரபு தேவா.

இந்த படத்தில் ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், யாஷிகா, உள்ளிட்ட பல நடிகைகள் நடித்துள்ளனர். பெண்களை காதலில் விழ வைத்து... கொலை செய்யும் சைக்கோ ராஜாவாக நடித்துள்ள பிரபு தேவாவின் நடிப்பு அனைவரையும் மிரளவைத்துள்ளது மட்டும் இன்றி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.

'மன்மதன்' படத்தில் சிம்புவுக்கு நடித்ததைப் போல் இந்த படத்தை பிரபுதேவா நடித்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆனால் மன்மதனையே மிஞ்சும் விதத்தில் பிரபு தேவா நடித்துள்ளதாகவும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் இந்த ட்ரைலருக்கு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. கணேசன் சேகர் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில் ரூபன் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்
மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!