
தனிப்பட்ட தாக்குதல்கள் என்னை பாதிக்காது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கை சமந்தாவுக்கு முடிவுக்கு வந்துள்ளது. 6 ஆண்டுகளாக காதலித்த நாகசைதன்யாவை பிரிந்துள்ளார் சமந்தா. இந்த நிலையில் அவரது பிரிவுக்கு யார் காரணம், என்ன நடந்தது? என்பதையெல்லாம் பலரும் இஷ்டத்திற்கு வதந்தி பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’என்னோட தனிப்பட்ட போராட்டத்துல உணர்வுரீதியாக நீங்கள் தந்த ஆறுதல்கள் என்னை உத்வேகப்படுத்துகிறது. என்னைப்பற்றி பரவுகிற பொய்யான வதந்திகள், கட்டுக்கதைகள் வீண் பழிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள நீங்கள் காட்டுஇற அன்புக்கு நன்றி. எனக்கு வேறு தொடர்பு இருகிறது. குழந்தை பெற்றுக்கொள்வதில் ஈடுபாடு இல்லாதவளாக இருக்கிறேன். சந்தர்ப்பவாதி என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் கருக்கலைப்புகளை செஞ்சுக்கிட்டதாகவும் பேசுறாங்க.
விவாகரத்தில் இருந்து மீண்டு வருவதே வலி நிறைந்த விஷயமாக இருக்கிறது. அதில் இருந்து வெளிவரவே நேரம் தேவைப்படுகிறது. இதில் தனிப்பட்ட தாக்குதல்கள் ரொம்பவும் சொல்லமுடியாத வேதனை தருகிறது. ஆனால், மற்றவர்களோட இந்த அவதூறுகள் என்னை பாதிப்பதை அனுமதிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.