
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், தாமரைக்கும் - நமீதா மாரிமுத்துவுக்கும் இடையே வெடிக்கும் பிரச்சனை குறித்து காட்டப்பட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் எப்போது பிரச்சனை வெடிக்கும் என்பதற்காகவே ஒரு தரப்பு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, தற்போது அவர்களது ஆசையை நிறைவேற்றும் விதமாக, அமோகமாக துவங்கியுள்ளது முதல் பிரச்சனை. பிக்பாஸ் வீட்டில் இந்த போட்டியை பற்றி தெரியாமல் அப்பாவி தனமாக விளையாடி வரும் தாமரை செல்விக்கும், நமீதாவுக்கு இடையே தான் இந்த பிரச்சனை வந்துள்ளது.
மேலும் செய்திகள்: டால் அடிக்கும் சிவப்பு நிற உடையில்... இடையழகை காட்டி சொக்க வைக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி!!
பாத்ரூமில், தாமரை செல்வி நமீதாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, நமீதா 40 குழந்தைகளையாவது தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என தன்னுடைய வாழ்நாள் ஆசையை கூறியுள்ளார். இதற்க்கு எப்படி பதில் கூற வேண்டும் என தெரியாமல் ஏலனமாக சிரித்தபடி, 40 என்ன... 400 குழந்தைகளை கூட நீ வளர்த்துக்கொள்ள என்று தாமரை கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: சமந்தாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? 200 கோடி ஜீவனாம்சத்தை மறுத்தது ஏன்... வெளியான தகவலை!
இவர் சிரித்து கொண்டு கூறிய விதம், நமிதாவின் ஈகோவை தூண்டி அவர் இதனை பிரச்சனையாகி வருகிறார். இதுகுறித்து தாமரை செல்வி அண்ணாச்சியிடம் கூற, அவர் இருவருக்கும் இடையே சமாதானம் பேச முயன்று, நமீதா இங்கவா மா... என்று கூப்பிட, என்னை அங்கு கூப்பிடாதீங்க என கை எடுத்து கும்பிட்டு அண்ணாச்சிக்கு செம்ம பல்பு கொடுத்துவிட்டார் நமீதா. இந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.