
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் எஸ்பிபி காந்த குரலில் வெளியாகி, பட்டையை கிளப்பிய நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலின் வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் செய்திகள்: சமந்தாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? 200 கோடி ஜீவனாம்சத்தை மறுத்தது ஏன்... வெளியான தகவலை!
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, மற்றொரு புறம் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா எஸ்.பி. பி, கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகவே, 'அண்ணாத்த' படத்தில் பாடிய அறிமுக பாடலான 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாடலான 'சார காற்றே' பாடல் நாளை வெளியாகும் என சன் பிச்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்: மகனை வெளியே கொண்டுவர துடித்த ஷாருக்கானுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..! ஆர்யன் கான் காவல் நீடிப்பு..!
மேலும் செய்திகள்: சமந்தா - டிசைனர் ப்ரீதாமுக்கு இடையே என்ன உறவு? உண்மையை போட்டுடைத்த மேக்கப் கலைஞர்..!
ரஜினிகாந்துடன் ஊஞ்சலில் அமர்ந்து நயன்தாரா டூயட் பாடுவது போல் போஸ்டர் வெளியிட்டுள்ளதால், இந்த படத்தின் நயன்தான் ஹீரோயின் என்பது தெரியவந்துள்ளது. இமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை சித்ஸ்ரீராம் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். 'அண்ணாத்த' படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள தகவலை தலைவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.