நரேன் பிறந்த நாளில் ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் கார்த்தி!

Published : Oct 07, 2021, 06:28 PM ISTUpdated : Oct 07, 2021, 06:30 PM IST
நரேன் பிறந்த நாளில் ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் கார்த்தி!

சுருக்கம்

நரேன் (Naren) நடிக்கும் ‘குரல்’ படத்தின் (Kural Movie) பட வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அவருடைய பிறந்த நாளான இன்று நடிகர் கார்த்தி (Karthi) தனது டிவிட்டர் பக்கத்தில் ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை (First Look Released) வெளியிட்டுள்ளார்.  இந்த ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

நரேன் நடிக்கும் ‘குரல்’ படத்தின் பட வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அவருடைய பிறந்த நாளான இன்று நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.  இந்த ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: சமந்தா - டிசைனர் ப்ரீதாமுக்கு இடையே என்ன உறவு? உண்மையை போட்டுடைத்த மேக்கப் கலைஞர்..!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டவர் நரேன். ‘சித்திரம் பேசுதடி’, படத்தில் துவங்கி, அஞ்சாதே’, 'கைதி' என இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்களில் ஏதேனும் ஒரு வித்தியாசம் காட்டுவதே இவர், தற்போது வரை தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க காரணம் என்றும் கூறலாம்.

நல்ல கதைகளில் நடிக்க கவனமாக இருக்கும் நரேன் தற்போது பிரபல மலையாள இயக்குநர் சுகீத் இயக்கத்தில் ‘குரல்’ படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பல ஹிட் கொடுத்த இயக்குநர் சுகீத் இயக்கும் முதல் தமிழ் படம் இது. இதில் நாயகியாக ஷ்ர்தா சிவதாஸ் நடிக்கிறார்.  இவர் ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தில் நடித்தவர். முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட், கனிகா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஷெரிஸி சீன் (Sherizze Sean) நடிக்கிறார்.

மேலும் செய்திகள்:ஷாருக்கானுக்கு இது கெட்ட செய்தி தான்..! மகன் ஆர்யன் விஷயத்தில் NCB எடுக்க உள்ள அதிரடி முடிவு?

 

ரசிகர்களை கவரும் விதத்தில் இந்த திரைப்படத்தின் த்ரில்லர் காட்சிகள் அட்டகாசமாக உருவாகியுள்ளது. குறிப்பாக நரேனின் மாறுபட்ட கெட்டபும், நடிப்பும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்றுவரும் வேளையில் ஃபர்ஸ்ட் லுக் இன்று நரேன் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கார்த்தியால்  வெளியிடப்பட்டுளள்து. இதற்க்கு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும், பாராட்டு குவிந்துள்ளது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!