
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி அமோகமாக துவங்கியது. கடந்த நான்கு சீசனை விட, போட்டியாளர்கள் தேர்வு இந்த முறை வித்தியாசமாகவே உள்ளது. அதே போல் எப்போதும் 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் நிலையில் இந்த முறை 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றுள்ளனர்.
மேலும் செய்திகள்: சமந்தாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? 200 கோடி ஜீவனாம்சத்தை மறுத்தது ஏன்... வெளியான தகவலை!
வழக்கம் போல் இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் லக்சுரி டாஸ்காக, தாங்கள் கடந்து வந்த பாதை பற்றி பிரபலங்கள் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி ஏற்கனவே இசைவாணி, சின்ன பொண்ணு, இமான் அண்ணாச்சி, சுருதி, மதுமிதா, நமீதா உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது சோகங்களை பகிர்ந்து போட்டியாளர்களை அழ வைத்த நிலையில், இன்றைய தினம் பவானி ரெட்டி தன்னுடைய காதல் கணவரின் இழப்பு குறித்து அது கொடுத்த வலி குறித்தும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் பேசுகிறார்.
மேலும் செய்திகள்:மகனை வெளியே கொண்டுவர துடித்த ஷாருக்கானுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..! ஆர்யன் கான் காவல் நீடிப்பு..!
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோவில், பவானி ரெட்டி கண்ணீருடன் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. "தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்த போது, எனக்கு அழுகை வரவில்லை. கோவம் தான் வந்தது. நிறைய கனவுகள் கண்டிருக்கிறோம். நிறைய கஷ்டப்பட்டோம் எதையும் நினைக்காமல் நடுவில் விட்டு சென்று விட்டார் என கோவம் வந்தது. அவரை அதிகம் காதலித்தேன். ஒரு குழந்தை போல் பார்த்து கொண்டேன் என, பவானி கூறிய போது, அங்கிருந்த பலர் கண்ணீர் விட்டு அழுவது இந்த புரோமோவில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.