இந்நிலையில் இதற்கு சமூக வலைதளத்தில் பதில் அளித்துள்ள நடிகை சமந்தா, எனது திருமண உறவு விவாகரத்தில் முடிந்தது குறித்து என் மீது அக்கறை காட்டும் அதே நேரத்தில் உண்மைக்கு மாறான பொய்யான கட்டுக்கதைகளும் பரப்பப்பட்டு வருகிறது.
குழந்தை பெற்றுத்தர மறுத்ததாகவும் கருவை கலைத்ததாகவும் வெளியாகும் வதந்திகள் எதுவும் என்னை ஒருபோதும் பாதிக்காது, இது போன்ற வதந்திகளால் நான் உடைந்து விட மாட்டேன் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். பிரபல நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமணபந்தம் பல்வேறு காரணங்களால் விவாகரத்தில் முடிந்துள்ளது. இந்நிலையில் அதற்கான காரணங்கள் குறித்து அவர்களது ரசிகர்கள் பல்வேறு யூகங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். தனது திருமண உறவு முறிவு குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு நடிகை சமந்தா காரசார பதிலடி கொடுத்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: மத்திய அரசை குறை சொல்லியே இந்த விஷயத்தில் சாதித்த தமிழகம். செம்ம பிளான்.. 5.2 கோடி பேருக்கு தடுப்பூசி.
இந்நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தாவை நாகசைதன்யா குடும்பத்தினர் வற்புறுத்தியதாகவும், ஆனால் தான் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதால் அவர் அதை ஏற்கவில்லை என்றும், அதுதான் விவாகரத்துக்கு காரணம் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர். ஆனால் திருமணமான பின்னரும் சமந்தா கவர்ச்சியாகவும், படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாகவும் நடிப்பதை நாகசைதன்யா குடும்பத்தினர் விரும்பவில்லை என்பதுதான் விவாகரத்துக்கு காரணம் என்றும் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதேபோல், தன்னைவிட அதிக படங்களில் சமந்தா நடித்து வெற்றிகரமான நடிகையாக உலா வருவது நாக சைதன்யாவுக்கு பொறாமையை ஏற்படுத்தியது, இதுதான் விவாகரத்துக்கு காரணம் என்பது போன்ற பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
இதையும் படியுங்கள்: நான் குழந்தை பெற்றுத்தர மறுத்தேனா.? கருவை கலைத்தேனா.? நான் ஒருபோதும் உடைந்து போகமாட்டேன்.. சமந்தா உருக்கம்.
இந்நிலையில் இதற்கு சமூக வலைதளத்தில் பதில் அளித்துள்ள நடிகை சமந்தா, எனது திருமண உறவு விவாகரத்தில் முடிந்தது குறித்து என் மீது அக்கறை காட்டும் அதே நேரத்தில் உண்மைக்கு மாறான பொய்யான கட்டுக்கதைகளும் பரப்பப்பட்டு வருகிறது. அந்த வதந்திகளுக்கு எதிராக என்னை பாதுகாக்க என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி, எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது, நான் குழந்தை பெற்று தர மறுத்தேன், நான் ஒரு சந்தர்ப்பவாதி மற்றும் கருவை கலைத்தேன் என வதந்திகள் வந்தன, பிரிவு எனக்கு மிகுந்த வலியை அளித்துள்ளது, அதிலிருந்து மீள்வதற்கு எனக்கு அவகாசம் வேண்டும், இதிலிருந்து நான் என்னைப் பாதுகாத்துக் கொள்வேனே தவிர ஒருபோதும் நான் உடைந்து விடமாட்டேன் என்ன அவர் பதிவிட்டுள்ளார்.