படப்பிடிப்பில் நடிகை டாப்ஸிக்கு ஏற்பட்ட சோகம்..!! என்ன நடந்தது..?

Published : Oct 10, 2021, 11:57 AM IST
படப்பிடிப்பில் நடிகை டாப்ஸிக்கு ஏற்பட்ட சோகம்..!! என்ன நடந்தது..?

சுருக்கம்

நடிகை டாப்ஸி (Taapsee pannu) தற்போது நடித்து வரும் ராஷ்மி ராக்கெட் (rashmi rocket) படப்பிடிப்பில், காயமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  

நடிகை டாப்ஸி தற்போது நடித்து வரும் ராஷ்மி ராக்கெட் படப்பிடிப்பில், காயமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

டாப்ஸி, நடிகர் விஜய் சேதுபதியுடன் (vijay sethupathi) இணைந்து நடித்த 'அனபெல் சேதுபதி' திரைப்படம், தமிழில் கடந்த மாதம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இதை தொடர்ந்து டாப்ஸி பண்ணு தனது அடுத்த படமாக உருவாகி வரும் ஸ்போர்ட்ஸ் டிராமா படமான  'ராஷ்மி ராக்கெட்' படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: முதல் நாளே வசூலில் தட்டி தூக்கிய சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'..! இத்தனை கோடியா..?

 

சிறிய கிராமத்தை சேர்ந்த ஒரு தடகள வீராங்கனை தேசிய அளவில் விளையாட செல்லும் போது, எப்படி பட்ட பிரச்சனைகளை மேற்கொள்கிறார் என்பதை விறுவிறுப்புடன் இந்த படம் கூற வருகிறது. இந்த படத்தின் நாயாகியாக நடிகை டாப்ஸி நடித்து வரும் நிலையில், பல உடற்பயிற்சிகள் செய்து இந்த கதாபாத்திரத்திற்காக தன்னை தயார் படுத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் வீட்டில் இருந்து நமீதா வெளியேற இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

 

இந்நிலையில் 'ராஷ்மி ராக்கெட்' படப்பிடிப்பில், டாப்ஸிக்கு திடீர் என காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரஷ்மியாக பணிபுரிந்த அவரது அனுபவத்தைப் பற்றி பேசுகையில், “முதல் மூன்று நாட்களில் ஓடும் பகுதி முழுவதையும் பற்றி நான் அதிக ஆர்வத்துடன் இருந்ததால், நான் ஒருமுறை காயமடைந்தேன். நான் அதை ரசித்தேன், அதனால் நான்  போதுமான ஓய்வு எடுக்கவில்லை, மூன்றாவது நாள் பலத்த காயம் ஏற்பட்டது".

மேலும் செய்திகள்:சமந்தா பற்றி பரவும் வதந்திகள்... 'உறுதியோடு இருங்கள்'!! ஆதரவாக குரல் கொடுக்கும் நடிகைகள்!!

 

"என் தசைகள் என் காலை தூக்கக்கூட முடியாத அளவுக்கு இறுக்கமாகிவிட்டன, மேலும் சில வாரங்கள் சிகிச்சை மற்றும் பல்வேறு வகையான பிசியோ தெரபி சிரிச்சைக்கு பின் மீண்டும் பயிற்சி மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.  இந்த படத்தை ரோனி ஸ்க்ரூவாலா, நேஹா ஆனந்த் மற்றும் பிரஞ்சல் கந்த்தியா தயாரித்துள்ளனர், அனிருத்த குஹா, நந்தா பெரியசாமி மற்றும் கனிகா தில்லோன் எழுதி, ஆகர்ஷ் குரானா இயக்கியுள்ளார்.

மேலும் செய்திகள்:தண்ணீருக்குள் தாராள கவர்ச்சி காட்டி தாறுமாறு பண்ணும் 'பிகில்' பட நடிகை ஈஷா ரெப்பா! கிக் ஏற்றும் ஹாட் ஸ்டில்ஸ்!

 

டாப்ஸி பண்ணு தவிர, ராஷ்மி ராக்கெட் திரைப்படத்தில் சுப்ரியா பதக், அபிஷேக் பானர்ஜி, பிரியான்ஷு பைன்யுலி மற்றும் சுப்ரியா பில்கோங்கர் போன்ற திறமையான நடிகர்களும் உள்ளனர். இந்த படம் அக்டோபர் 15 ஆம் தேதி ZEE5 இல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!