ஜீவா-சிவா இணைந்து நடிக்கும் கலகலப்பான குடும்பத் திரைப்படம் ‘கோல்மால்’..!

Published : Oct 10, 2021, 06:57 PM IST
ஜீவா-சிவா இணைந்து நடிக்கும் கலகலப்பான குடும்பத் திரைப்படம் ‘கோல்மால்’..!

சுருக்கம்

‘மிருகா' (Miruga) படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி வினோத் ஜெயின் (Vinoth Jain) அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ள 'கோல்மால்’ (Kolmal) என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா (Jeeva)  மற்றும் சிவா (Siva) இணைந்து நடிக்கவுள்ளனர்.

‘மிருகா' படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி வினோத் ஜெயின் அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ள 'கோல்மால்’ என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்பு கன்னடத்தில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ள பொன்குமரன் இந்த தமிழ் திரைப்படத்தை இயக்குகிறார்

“முழுநீள நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக கோல்மால் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும், ரசிகர்களை அவர்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவழைக்கும்,” என்று பொன்குமரன் தெரிவித்தார்.

“ஜீவாவும் சிவாவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் கூட்டணி அமைக்கும் பொழுது அது இன்னும் சிறப்பாக இருக்கும்.  பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த் மற்றும் கே எஸ் ஜி வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்.

அதிக பொருட்செலவில் மொரிஷியஸில் 'கோல்மால்' முழு படமும் படமாக்கப்படும் என்று பொன்குமரன் மேலும் கூறினார். "இந்த படத்தை  வினோத் ஜெயின் தயாரிக்கிறார். நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டின் முதல் பாதியில் படம் வெளியிடப்படும், என்று அவர் தெரிவித்தார்.

அருள் தேவ் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை எஸ் சரவணன் கையாளவுள்ளார். படத்தொகுப்பை டான் போஸ்கோவும், கலை இயக்கத்தை சிவாவும் மேற்கொள்ள, கவிஞர்கள் மதன் கார்க்கி மற்றும் விவேகா பாடல்களை எழுத உள்ளனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!