உலகின் டாப் 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
புகழ்பெற்ற டைம் இதழ் நடத்திய செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான வாக்கெடுப்பில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிடும். அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்தார்.
இந்த பட்டியலில் நடிகர் மைக்கேல் யோ, தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்ற நபர்களும் இடம்பெற்றுள்ளனர். டைம் இதழின் அறிக்கையின்படி, மொத்தம் பதிவான 1.2 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் மட்டும் 4% வாக்குகளைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Watch : ‘வேணாம்பா, லக்கேஜ் நானே எடுத்துட்டு வாரேன்’ உதவியாளரிடம் பெருந்தன்மையை காட்டிய அஜித்... என்ன மனுஷன்யா!
நடிகர் ஷாருக்கான் கைவசம் தற்போது ஜவான் திரைப்படம் உள்ளது. இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடித்து வருகிற ஜூன் 2-ந் தேதி படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதுதவிர டுங்கி என்கிற படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார் ஷாருக்கான். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... வசூல் மழை பொழியும் தசரா... பி.எம்.டபிள்யூ கார் பரிசளித்து வெற்றியை வேறலெவலில் கொண்டாடிய படக்குழு