விஜய் டிவி சீரியலில் இருந்து திடீர் என விலகிய நீலிமா! அதிர்ச்சியில் சின்னத்திரை ரசிகர்கள்!

Published : Mar 18, 2020, 07:31 PM IST
விஜய் டிவி சீரியலில் இருந்து திடீர் என விலகிய நீலிமா! அதிர்ச்சியில் சின்னத்திரை ரசிகர்கள்!

சுருக்கம்

குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி,  சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து பிரபலமானவர் நீலிமாராணி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி சீரியலில் வில்லி ரோலில் நடித்து வந்த இவர்,  திடீர் என இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   

குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி,  சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து பிரபலமானவர் நீலிமாராணி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி சீரியலில் வில்லி ரோலில் நடித்து வந்த இவர்,  திடீர் என இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

கடந்த இரண்டு வருடமாக,  விஜய் டிவியில் பல்வேறு திருப்புமுனைகளுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அரண்மனைக்கிளி. இதில் மோனிஷா, சூர்யா தர்ஷன், பிரகதி, மைனா நந்தினி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்: கோரோனோ பிரேக்... பழமையை கையில் எடுக்க சொன்ன குஷ்பு: வரவேற்கும் நெட்டிசன்கள்!
 

குறிப்பாக நீலிமாவின் கேரக்டருக்கு இந்த சீரியலில் முக்கியத்துவம் அதிகமாகவே கொடுக்கப்பட்டு வந்தது. இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்து, அதற்கான காரணத்தை வெளியிடவில்லை.

நீலிமா பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், நான் கேமரா முன் நிற்கும்போது, மிகவும் மகிழ்ச்சியான ஒருவராகவே இருந்துள்ளேன். குழந்தை நட்சத்திரமாக இருந்தது முதல், தற்போது வரை நடித்து வருகிறேன். பல மாற்றங்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ள போதிலும் அதனை ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொண்டேன். 'துர்கா நீ போய் வா' எனக்கூறி நீங்கள் தான் என் பலம் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என ரசிகர்களிடம் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்:படவாய்ப்பு தருவதாக குஜால் செய்துவிட்டு கழட்டி விட்ட இயக்குனர்கள்! அடுத்த ஸ்ரீரெட்டியாக மாறிய இலக்கியா!
 

நீலிமாவின் இந்த திடீர் விலகல், அவருடைய சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!