
தன்னை அடித்து துன்புறுத்தியதாக, பிரபல நடிகர் மீது, அவரது மனைவி கொடுத்த புகாரில் அடிப்படையில் நடிகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் சின்னத்திரை நட்சத்திர ஜோடியாக அறியப்படுபவர்கள் கரண் மெஹ்ரா மற்றும் அவரது மனைவி நிஷா ராவல். இவர்கள் இருவரும், தொலைக்காட்சி தொடரில் இணைந்து நடித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார்.
மேலும் செய்திகள்: 5 ஜி சேவைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை..!
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் கரண் மெஹ்ரா, அவரது மனைவி நிஷாவை அடித்ததோடு, சுவற்றில் மோதி அவரை காயப்படுத்தியதாக கூறி நிஷா, கணவர் கரண் மீது மும்பை கோரேகான் போலீசில் புகார் அளித்தார்.
மேலும் செய்திகள்: அவசர அவசரமாக நடந்து முடிந்த நடிகை பிரணிதா திருமணம்..! வெளியான அழகிய புகைப்படங்கள்..!
இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார்... அவரை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுத்துள்ளனர். இந்த தகவல் பாலிவுட் சின்னத்திரை திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரண் மெஹ்ரா, ஸ்டோரி 2050 ,பஸ்தி ஹே சஸ்தி உள்ளிட்ட பல இந்தி சீரியல்களில் நடித்துள்ளார். அதே போல் ஒரு சில பாலிவுட் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது மனைவியும் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர். மனைவி கொடுத்த புகாரின் அடிப்படியில் சீரியல் நடிகர் கரண் கைது செய்யப்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.