ஒரே வீட்டில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை நடத்திய சினிமா பிரபலம் மற்றும் அவரது காதலர் தற்கொலை!

Published : Jun 01, 2021, 01:52 PM IST
ஒரே வீட்டில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை நடத்திய சினிமா பிரபலம் மற்றும் அவரது காதலர் தற்கொலை!

சுருக்கம்

திருமணம் செய்து கொள்ளாமல் காதலருடன் வாழ்க்கை நடத்தி வந்த சினிமா பிரபலமும், மற்றும் அவரது காதலரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருமணம் செய்து கொள்ளாமல் காதலருடன் வாழ்க்கை நடத்தி வந்த சினிமா பிரபலமும், மற்றும் அவரது காதலரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: அனிகாவிற்கு அடித்த ஜாக்பார்ட்...! சூப்பர் ஸ்டாருடன் பிளைட்டில்... வேற லெவல் போட்டோஸ்..!
 

கேரள மாநிலம், ஆலப்புழா அருகே உள்ள செர்தலா பகுதியில் வசித்து வந்தவர் ரூபி பாபு. 35 வயதாகும் இவர், பல்வேறு மலையாள படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக 45 வயதாகும் சுனில் என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே  ரூபி பாபு தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, சில மணி நேரங்களுக்கு பிறகு, அவரது காதலர் சுனிலுக்கு தெரிய வரவே, காதலி இல்லாத உலகத்தில் தன்னாலும் வாழ முடியாது என, இவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன்னுடைய நண்பர் ஒருவரை போனில் அழைத்து நடந்த சம்பவங்கள் குறித்து கூறி, தானும் தற்கொலை செய்து கொள்ள உள்ளதை தெரிவித்து விட்டு போனை துண்டித்துள்ளார்.

மேலும் செய்திகள்: சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சியா...? முதுகு முழுவதையும் காட்டி... இளம் நெஞ்சங்களை ஏங்க விட்ட சாக்ஷி அகர்வால்!
 

இவருடைய நண்பர் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செய்து பார்த்தபோது, கீழ்தளத்தில் உள்ள பெட் ரூம்மில் ரூபியும், முதல் மாடியில் சுனிலும் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டனர். இதனையடுத்து இவர்களது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் எந்த பிரச்சனைக்காக இருவரும் இந்த முடிவை எடுத்தனர் என விசாரணை செய்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்: அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? விசாரணையில் வெளிவந்த தகவல்!
 

சினிமா பிரபலம் மற்றும் அவரது காதலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மலையாள திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் ரூபி பாபுவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?