
கொரோனா தொற்றால் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு திறமையான கலைஞர்கள் உயிரிழந்த சோகத்தில் இருந்தே சினிமா ரசிகர்கள் வெளிவராத சமயத்தில், ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் ஹிட்டடித்த திரைப்படம் டார்சன் இதில் கதாநாயகனாக நடித்த ஜோ லாரா (58) விமான விபத்தில் உயிரிழந்தது ஹாலிவுட்டில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. நடிகர் ஜோ லாரா 1996 மற்றும் 2000-ம் ஆண்டுகளுக்கு இடையில் மொத்தம் 22 எபிசோடுகளில் டார்சானாக நடித்துள்ளார். ஸ்டீல் ஃபிரண்டியர், சன்செட் ஹீட், கன்ஸ்மோக்: தி லாஸ்ட் அப்பாச்சி, அமெரிக்கன் சைபோர்க்: ஸ்டீல் வாரியர், தி மாக்னிஃபிசென்ட் செவன், பேவாட்ச் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். ஜோ லாரா கடந்த சனிக்கிழமை செஸ்னா 501 எனப்படும் தனியார் ஜெட் விமானத்தில் நாஷ்வில்லிக்கு வெளியே உள்ள ஸ்மிர்னா என்ற விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பாம் பீச் நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது திடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் பெர்சி பிரீஸ்ட் ஏரியில் விமானம் விழுந்து மூழ்கியது. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விமானத்தில் ஜோ லாராவுடன் அவரது மனைவி உட்பட 7 பேர் பயணம் செய்துள்ளனர். லாரா மற்றும் க்வென் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.