நடிகையுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திவிட்டு கொலை மிரட்டல்..! முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிவு..!

Published : May 30, 2021, 07:26 PM ISTUpdated : May 30, 2021, 07:32 PM IST
நடிகையுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திவிட்டு கொலை மிரட்டல்..! முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிவு..!

சுருக்கம்

திருமணம் செய்யாமல் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

திருமணம் செய்யாமல் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: 'தளபதி 66' படத்தை உறுதி செய்த பிரபல இயக்குனர்..! அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்..!
 

'நாடோடிகள்' படத்தில் துணை நடிகைகளில் ஒருவராக அறிமுகமானவர் சாந்தினி.  இதைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் அதிமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியதால், மணிகண்டன் கடந்த ஐந்து வருடமாக சாந்தினி உடன் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்ததாக நடிகை பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும், அதற்கான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். தற்போது திருமணம் செய்துகொள்ள கூறி அவரை கேட்ட போது, அதற்கு மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதுடன்... தனக்கே தெரியாமல் எடுத்து வைத்திருக்கும், தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என அச்சுறுத்துவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

மேலும் செய்திகள்: பட்டன் போட மறந்துடீங்களா..? படு மோசமான கவர்ச்சியில் அத்து மீறிய ரைசாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
 

நடிகை சாந்தினி, அமைச்சருடன் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும், வாட்ஸ் அப் போன்ற வற்றில் சாட்டிங் செய்த விவரங்களையும் வெளியிருள்ளர். இதுகுறித்த தகவல் வெளியானபின் அமைச்சர் மணிகண்டன் அந்த பெண் யார் என்றே தெரியாது என்றும், பணம் பறிக்கும் கும்பல் என தற்போது தெரியவந்துள்ளதாகவும், 3 கோடி கொடு,  இரண்டு கோடி கொடு, 30 லட்சம் கொடு என தன்னிடம் பேரம் பேசினார்கள் என கூறி சமாளித்தார்.

மேலும் செய்திகள்: சினிமா வாய்ப்பு பெற்று தருவதாக PSBB பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்..? பகீர் தகவல்!
 

அதே போல் தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும். நான் பயப்பட மாட்டேன் என அமைச்சர் பதிலளித்தார். இந்நிலையில் நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி, அடித்து காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் விருப்பம் இல்லாமல் கரு களைப்பு செய்தல் என  5 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!