'தளபதி 66' படத்தை உறுதி செய்த பிரபல இயக்குனர்..! அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்..!

By manimegalai aFirst Published May 30, 2021, 6:35 PM IST
Highlights

தளபதி விஜய் தற்போது, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 65 ஆவது படத்தில் நடித்து வரும், நிலையில் 66 ஆவது படத்தை யார்? இயக்குவார் என்கிற சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அடுத்த படத்தை விஜய்யை வைத்து இயக்க உள்ளதை பிரபல தெலுங்கு பட இயக்குனர் உறுதி செய்துள்ளார்.
 

தளபதி விஜய் தற்போது, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 65 ஆவது படத்தில் நடித்து வரும், நிலையில் 66 ஆவது படத்தை யார்? இயக்குவார் என்கிற சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அடுத்த படத்தை விஜய்யை வைத்து இயக்க உள்ளதை பிரபல தெலுங்கு பட இயக்குனர் உறுதி செய்துள்ளார்.

மேலும் செய்திகள்: பட்டன் போட மறந்துடீங்களா..? படு மோசமான கவர்ச்சியில் அத்து மீறிய ரைசாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
 

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் தற்போது 'தளபதி 65 ' ஆவது படத்தில் நடித்து வருகிறார்.  விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த அப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதற்காக விஜய் தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கையேடு அன்று இரவே விமானத்தில் ஜார்ஜியா பறந்தார்விஜய். சுமார் 15 நாட்களுக்கு மேல் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜிவாவில் நடந்த நிலையில், படக்குழுவினர் ஏப்ரல் 24 ஆம் தேதி சென்னை திரும்பினர்.

மேலும் செய்திகள்: சினிமா வாய்ப்பு பெற்று தருவதாக PSBB பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்..? பகீர் தகவல்!
 

கொரோனா இரண்டாவது அலை காரணமாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறாமல் உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே, 'தளபதி 66 ' படத்தை இயக்க உள்ள இயக்குனர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில்... சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபுவை வைத்து, தெலுங்கில் 'மகரிஷி' என்கிற படத்தை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த, இயக்குனர் வம்சி, தளபதி விஜய்யை சந்தித்து கதை கூறியதாக கூறப்பட்டது.

மேலும் செய்திகள்: அனிகாவிற்கு அடித்த ஜாக்பார்ட்...! சூப்பர் ஸ்டாருடன் பிளைட்டில்... வேற லெவல் போட்டோஸ்..!
 

கதை பிடித்து விட்டதால், விஜய்யும் ஓகே சொன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் இயக்குனர் வம்சி தற்போது தெரிவித்து, தளபதி 66 பட தகவலை உறுதி செய்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது...  விஜய்யின் படத்தை இயக்க உள்ளது உண்மை தான். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும், மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராக உள்ளத்தையும் உறுதி படுத்தியுள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

click me!