
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பகீர் கிளப்பியுள்ளது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளதாக ஆசிரியர்கள் மீது குற்றஞ்சாட்டி, சில மாணவிகள் வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள மிக சிறந்த பள்ளிகளில் ஒன்றாக இருக்கும் PSBB பள்ளியில், தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக... பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ராஜகோபாலன் என்கிற ஆசிரியர், இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அரை நிர்வணமாக ஆன்லைன் கிளாஸ் எடுப்பது, மாணவிகளுக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்புவது, நள்ளிரவில் வீடியோ கால் செய்வது என ராஜகோபாலனின் அத்துமீறல்கள் அதிகரித்த போதும் அதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்த ஆசிரியரின் அத்து மீறல்கள் வெளிவரவே, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரையும் கொந்தளிக்க செய்தது. இதை தொடர்ந்து அவரை போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். அதே நேரத்தில் PSBB பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் மேலும் சில ஆசிரியர்களிடம் இது குறித்து விசாரணை செய்ய காவல்துறையினர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதே நேரத்தில் காவல் துறையினர், ஆசிரியர்களால் மற்ற மாணவிகள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை தைரியமாக புகார் கொடுக்கலாம் என்றும், அந்த புகார் மற்றும், புகார் கொடுத்தவரின் பெயர் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சில மாணவிகள் புகார் கொடுத்துள்ளார்களாம்.
இந்த புகார்களில் சில மாணவிகளுக்கு சினிமா மேல் உள்ள ஆசையை பயன்படுத்தி கொள்ளும் வகையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி PSBB ஆசிரியர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது, கேட்பவர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே இந்த பள்ளியில் விவகாரத்தில் அடுத்தடுத்து சில ஆசிரியர்களும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.