மாயாவதி குறித்து ஆபாச ஜோக்... தூதர் பதவியில் இருந்து அதிரடியாக தூக்கப்பட்ட பிரபல நடிகர்!

Published : May 30, 2021, 05:12 PM IST
மாயாவதி குறித்து ஆபாச ஜோக்... தூதர் பதவியில் இருந்து அதிரடியாக தூக்கப்பட்ட பிரபல நடிகர்!

சுருக்கம்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராகஅறியப்படுபவர் ரன்தீப் ஹூடா, இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்... உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் மாயவதி குறித்து ஆபாசமாக ஜோக் அடித்ததற்கு அவரை அதிரடியாக தூதர் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர்.  

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராகஅறியப்படுபவர் ரன்தீப் ஹூடா, இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்... உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் மாயவதி குறித்து ஆபாசமாக ஜோக் அடித்ததற்கு அவரை அதிரடியாக தூதர் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர்.

மேலும் செய்திகள் : சினிமா வாய்ப்பு பெற்று தருவதாக PSBB பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்..? பகீர் தகவல்!
 

குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி, பின்னர் பாலிவுட் திரையுலகில் கதாநாயகனாக உயர்ந்தவர் ரன்தீப் ஹூடா. சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில், பிரபு தேவா இயக்கத்தில் வெளியாகி இருந்த 'ராதே' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களையே இந்த படம் பெற்றாலும், சமூக வலைதளத்தில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட படம் என்கிற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரன்தீப் ஹூடா, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் மாயவதி குறித்து ஆபாசமாக ஜோக் ஒன்றை அடித்துள்ளார். 2012 ஆண்டு நடந்த இந்த விவகாரம் குறித்து, சமீபத்தில் வீடியோ பதிவு ஒன்று வெளியாகியது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பலர் தொடர்ந்து ரன்தீப் ஹூடாவுக்கு எதிராக விமர்சித்து வந்தனர்.

மேலும் செய்திகள் :அனிகாவிற்கு அடித்த ஜாக்பார்ட்...! சூப்பர் ஸ்டாருடன் பிளைட்டில்... வேற லெவல் போட்டோஸ்..!
 

மேலும் இவரது இந்த செயலால், இவர் ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் கீழ் இயங்கும் புலம்பெயர் வனவிலங்குகளின் பாதுகாப்பு அமைப்பின் தூதராக இருந்த நிலையில் அந்த பதவியிலிருந்தும்,  ரன்தீப் ஹூடா நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!