5 ஜி சேவைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை..!

Published : Jun 01, 2021, 03:53 PM IST
5 ஜி சேவைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை..!

சுருக்கம்

நவீன தொழில் நுட்ப வளர்ச்சி உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், விரைவில் இந்தியாவிலும் 5 ஜி சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இதற்க்கு எதிராக தான் தற்போது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா.  

நவீன தொழில் நுட்ப வளர்ச்சி உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், விரைவில் இந்தியாவிலும் 5 ஜி சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இதற்க்கு எதிராக தான் தற்போது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா.

5 ஜி சேவை துவங்க பட்டால் அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனிதர்கள் மட்டுமின்றி பெரும்பாலான பறவைகள், விலங்குகள் உள்பட பிற உயிர்களுக்கும் பல்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் எனவே இந்த 5ஜி சேவையை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்றும் நடிகை ஜூகி சாவ்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாகவும், தொகுப்பாளராகவும் பல்வேறு திறமைகளோடு அறியப்படும் இவர், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’நாட்டுக்கு ஒரு நல்லவன்’  படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிப்பு என்பதை தாண்டி, பல்வேறு சமூக பணிகளிலும் ஆர்வம் கொண்டவர்.

இந்த நிலையில் 5ஜி தொழில்நுட்பம் காரணமாக இவர் தொடர்ந்துள்ள வழக்கில்,  4ஜி சேவையால் ஏற்படுத்தும் பாதிப்பை விட, 5 ஜி சேவை...   10 முதல் 100 மடங்கு வரி அதிக கதிர் வீச்சை ஏற்படுத்த கூடியது.  இதனால் மனிதர்கள் மட்டுமின்றி பாதிப்பு ஏற்படுவது இன்றி, பல்வேறு வகையான பறவைகள், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே 5 ஜி சேவையை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என,  நடிகை ஜூகி  சாவ்லா பொதுநல வழக்கு ஒன்றை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!