Selvaraghavan's Bakasuran First Look : பகாசூரனாக செல்வராகவன்... வெளியானது முதல் பார்வை ...

By Kanmani P  |  First Published Aug 26, 2022, 1:13 PM IST

பகாசூரன் படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதிலிருந்து புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. அதோடு படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்பதையும் தெரிவித்துள்ளது.


தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.  தற்போது செல்வராகவன் தனுஷைவைத்து நானே வருவேன் என்னும் படத்தை இயக்குவதற்கு காத்திருக்கிறாய். இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவரது சகோதரர் தனுஷ் இரட்டை வேடங்களில் இதில் நடிப்பார் என தெரிகிறது. இந்திரஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக சாணிக்காகிதம், பீஸ்ட் மூலம் நடிகராக அறிமுகமான செல்வராகவன் நானே வருவன் படத்திலும் நடித்துள்ளார் என்பது புதிய தகவல்.

இந்நிலையில் பகாசூரன் படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதிலிருந்து புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. அதோடு படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்பதையும் தெரிவித்துள்ளது.  இதில் நட்டி நடராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க,  சான் சி எஸ் இசையமைக்கிறார். மோகன் ஜி இயக்கும் இந்த  திட்டத்திற்கான  வெளியீட்டு தேதியை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...அசர வைக்கும் 'பொன்னியின் செல்வன்' ஐஸ்வர்யா ராய்யின்... நந்தினி தோற்றம்! வைரலாகும் BTS போட்டோஸ்!

Here is the stunning first look of Dir 's featuring

Teaser will be launched on Aug 28th Sunday at 10:10 AM. pic.twitter.com/BbGgHY8lc9

— Sreedhar Pillai (@sri50)

முன்னதாக தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டரை இயக்குநர் செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் தனுஷுடன் மீண்டும் இணையவுள்ளார்.. இருவரும் கடைசியாக மயக்கம் என்ன படத்தில் பணியாற்றினார்கள்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமா? விஜய் டிவி வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பு!

காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன போன்ற ஹிட் தமிழ் படங்கள்  வரிசையில் தற்போது நானே வருவேன் இணையவுள்ளது.  அவர்களின் ஐந்தாவது ஒத்துழைப்பாகும்.  நானே வருவேன் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று செல்வராகவன் பகிர்ந்துள்ளார். இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, மாரி புகழ் பிரசன்னா ஜிகே படத்தொகுப்பைக் மேற்கொள்கிறார்.. யுவன் ஷங்கர் ராஜா 2006 ஆம் ஆண்டு புதுப்பேட்டைக்கான ஆல்பத்திற்குப் பிறகு தனுஷ்-யுவன்-செல்வா காம்போ மீண்டும் இதன் மூலம் ரசிகர்களை கவரவுள்ளது..  இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் பேனரில் கலைப்புலி எஸ். தாணுவால் தயாரிக்கிறார்.

மேலும் செய்திகள்: கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... லைட்டாக இடையை காட்டி குஷி ஜோதிகாவுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்!

Coming Soon in Theatres! pic.twitter.com/4bs8bw42kk

— Kalaippuli S Thanu (@theVcreations)
click me!