'இந்தியன் 2' படத்தை இயக்குவதால்... ராம் சரண் படப்பிடிப்பு நிறுத்தப்படுகிறதா? இயக்குனர் ஷங்கர் விளக்கம்!

By manimegalai a  |  First Published Aug 25, 2022, 10:54 PM IST

இயக்குனர் ஷங்கர் தற்போது பாதியில் நிறுத்தப்பட்ட 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை, இரண்டாவது முறையாக பூஜை போட்டு துவங்கியுள்ளார். எனவே இவர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து இயக்கி வந்த ஆர்சி 15 திரைப்படம், தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
 


இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்திற்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டு. காரணம் மற்ற இயக்குனர்கள் படங்களை விட இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களில் ஏதேனும் பிரமாண்ட காட்சிகள் மற்றும் புதிய தகவல் இருக்கும் என்பதால் தான். அப்படி இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், 'இந்தியன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாவது பாகத்தை சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் கமலஹாசனை வைத்து இயக்க உள்ளதாக அறிவித்தார்.

Tap to resize

Latest Videos

இதைத்தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில், ஒரு சில காரணங்களால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து, இன்னும் பெயரிடாத திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

மேலயும் செய்திகள்: பாறைக்கு நடுவே.. பஞ்சு மெத்தையில் படுத்தபடி ஹாய்யாக போஸ் கொடுக்கும் நயன்தாரா! கலக்கல் ஹனி மூன் போட்டோஸ்!
 

மேலும் 'இந்தியன் 2'  பட பிரச்சினைகள், சுமூகமாக முடிக்கப்பட்ட நிலையில்... மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு நேற்று இரண்டாவது முறையாக பூஜை போட்டு ஆரம்பமானது. விரைவில் இதில் கமலஹாசன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,  இந்தியன் 2 படத்தை இயக்குவதால் ராம் சரணின் ஆர்சி 15 படத்தை இயக்குனர் ஷங்கர் தற்காலிகமாக நிறுத்தியதாக தகவல் வெளியானது.

மேலயும் செய்திகள்: கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... லைட்டாக இடையை காட்டி குஷி ஜோதிகாவுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்!
 

இதற்கு விளக்கம் கொடுத்துள்ள இயக்குனர் ஷங்கர், ஆர்சி15 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ள நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகளும் துவங்கி உள்ளது. எனவே எவ்வித தொய்வு இல்லாமல், இரண்டு படத்தையும் ஒரே சமயத்தில் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே இந்த இரண்டு படங்களின் அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!