Cobra Trailer : உருமாறும் சீயான் ..வெளியானது விக்ரமின் கோப்ரா ட்ரைலர்..

Published : Aug 25, 2022, 06:19 PM ISTUpdated : Aug 25, 2022, 06:23 PM IST
Cobra Trailer  : உருமாறும் சீயான் ..வெளியானது விக்ரமின் கோப்ரா ட்ரைலர்..

சுருக்கம்

  Cobra Trailer :  இன்று படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சியான் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதை அடுத்து இணையதளத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஸ்பைத் திரில்லர் படமான இது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கியுள்ளது. இந்த படம் சமீபத்தில் தான் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. மூன்று ஆண்டுகளாக படபிடிப்பில் இருக்கும் படம் குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்தே காணப்படுகிறது. அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள இதில் சியான் பல தோற்றத்தில் வருவார் என கூறப்படுகிறது. கேஜிஎப் நாயகி தமிழ் அறிமுகம்  கோப்ரா மூலம் தான் நடைபெறுகிறது

படத்தின் பாடல்கள் சமீபத்தில் பிரம்மாண்டமான நிகழ்ச்சியின் மூலம் வெளியிடப்பட்டது. முன்னதாக உடல்நிலை கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த விக்ரம் இசை விக்ரமை இசை வெளியீட்டு விழாவில் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்து போகினர்.  தற்போது படத்தின் ப்ரோமோஷன் விழாக்கள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. இதை ஒட்டி நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சியான் விக்ரம் சமீபத்தில் மதுரைக்கு ப்ரோமோஷன் செய்ய என்ட்ரி கொடுத்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. இன்று படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சியான் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதை அடுத்து இணையதளத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். மணிரத்தினத்தின் கனவு படமான இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் .ராஜராஜ சோழனின் வரலாற்றை மையமாகக் கொண்ட இந்த படத்தில் சோழ இளவரசனாக விக்ரம் நடிக்கிறார்.  சீயான் தொடர்பான பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாக்ஸ் ஆபிஸில் சிங்கம் போல் சிங்கிளாக வசூல் வேட்டையாடிய படையப்பா... 3 நாளில் இம்புட்டு கலெக்‌ஷனா?
லேட்டஸ்ட் ஹிட்ஸ்... ஓடிடியில் அடிபொலி ஹிட் அடித்த டாப் 5 மூவீஸ் இதோ