
தமிழ் திரையுலகில் தன்னிகரற்ற நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். கேப்டன் என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளா.ர் முதன் முதலில் ரசிகர் மன்றம் துவங்கப்பட்டதும் இவருக்காக தான். மன்றத்திலிருந்து கட்சியாக உருமாறிய தேமுதிகவின் தலைவராக இரண்டு தேர்தல்களில் மிகச் சிறப்பான வெற்றிகளை பெற்றிருந்தார் விஜயகாந்த். அதோடு நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து பல கோடி ரூபாய் கடன்களை அடைத்த புகழும் இவரைத்தான் சேரும். மக்கள் பணிக்காகவும் தன்னை அர்ப்பணித்து கொண்ட விஜயகாந்த் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக இலவச உணவுகளை வழங்கி வந்தார்.
சமீபகாலமாக உடல் நலம் குன்றி இருக்கும் விஜயகாந்த் பழைய நிலைக்கு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்தின் 70 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் இவர் முன்பு நடித்த படங்களின் வெற்றிகளும் பாடல்களும், டூப் இல்லாமல் இவர் நடித்த ஸ்டண்ட் காட்சிகளும் குறித்தான செய்திகள் தான் சமூக வலைதளமும் முழுவதும். அந்த வகையில் தற்போது தயாரிப்பாளரின் பதிவு ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..என்னது ஜெயம் ரவி படம் மாதிரி இருக்கா? விஜய் தேவரகொண்டாவின் லைகர் பட விமர்சனம் இதோ !
விஜயகாந்தின் வெற்றி படங்களில் ஒன்றான சேதுபதி ஐபிஎஸ் படத்தின் காட்சி தான் அது. 90களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த அசைக்க முடியாத பிம்பமாக இருந்தவர் விஜயகாந்த். இவர் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படம் தான் சேதுபதி ஐபிஎஸ். ஏவிஎம் ப்ரொடக்ஷன் தயாரித்த இந்த படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இந்த பாடம் பலத்த வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது தயாரிப்பாளர் சேதுபதி ஐபிஎஸ் படத்தின் செட்டில் பட மாக்கப்பட்ட சில காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டூப் இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகளை மேற்கொள்கிறார் விஜயகாந்த்.
மேலும் செய்திகளுக்கு...Vijayakanth Birthday: விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி IMDB பட்டியலில் அதிக ராங்கிங் பெற்ற டாப் 5 படங்கள்..!
இன்றைய தலைமுறை நடிகர்கள் பலரும் சின்ன சின்ன சண்டைகாட்சிகளை செய்வதற்கே பயப்படுவதாக கூறப்படும் நிலையில் விஜயகாந்த் மணிக்கூண்டில் டூப் இல்லாமல் ஸ்டண்ட் செய்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் விஜயகாந்தை போற்றி புகழ்ந்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் பிரபலம் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டு கொலை? சகோதரர் பரபரப்பு புகார்!
அந்த காட்சிகள் மணிகுண்டின் முள்ளை திருப்பாவிட்டால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் சூழ்நிலையை அறிந்த காவல்துறை அதிகாரி சேதுபதி தன்னந்தனி ஆளாக மணி குண்டின் மீது ஏறி நேரத்தை பின்னோக்கி திருப்புகிறார் அப்போது முள்ளை திருப்பும்போது பல ஆபத்துகளை சந்திக்கிறார். ஆனால் இந்த காட்சிகளுக்கு டூப் தேவையில்லை என கூறிய விஜயகாந்த் தானே சென்று மிகக் கடினமான இந்த காட்சி மேற்கொண்டுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.