இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் நான்கு நடிகர்கள் யார் யார் என்பதை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 22 ஆம் தேதி, வெளியிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதை அறிவித்தது படக்குழு. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாக உள்ள இந்த படத்தில், 'எந்திரன்' படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தாலும், இதுகுறித்து தற்போது வரை, உறுதியான தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் நான்கு நடிகர்கள் யார்... யார்..? என்பதை, 'ஜெயிலர்' படத்தை தயாரித்து வரும் சன் பிச்சர்ஸ் நிறுவனம், வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள்: ராஜு முருகன் இயக்கத்தில்... இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி! வெளியான லேட்டஸ்ட் தகவல்!
ஏற்கனவே வெளியான தகவலின் படி, நடிகை ரம்யா கிருஷ்ணன், காமெடி நடிகர் யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன், மற்றும் தரமணி நடிகர் வசந்த் ரவி ஆகியோர் நடிக்க உள்ளனர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இந்த தகவலை தற்போது 'ஜெயிலர்' படத்தை தயாரிக்கும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. மற்ற நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படம், 2023ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: வாயில் டின்னுடன்... டீப் நெக் உடையில்... தொடை முழுவதையும் காட்டி.. உச்ச கவர்ச்சியில் ஷிவானி கொடுத்த கூல் போஸ்!
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே, அதனை இந்திய அளவிற்கு ட்ரெண்ட் செய்த ரசிகர்கள், தற்போது ஜெயிலர் படத்தின் காஸ்ட் குறித்த தகவலையும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.