
திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள காலகஸ்தி சிவன் கோயில் பல்வேறு சிறப்புகள் கொண்ட திருத்தலமாகும். குறிப்பாக ராகு கேது தோஷமுள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்றால் தோஷம் நீங்கி விரைவில் அவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. எனவே இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் செய்திகள்: தங்கை நாடியாவின் திருமண புகைப்படங்களை பகிர்த ஆண்ட்ரியா..! கல்யாணத்தில் கூட கவர்ச்சி உடையில் கலக்குறாங்களே!
அந்த வகையில் இன்று திடீரென நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சார துறை அமைச்சர் ரோஜா காளஹஸ்தி கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அப்போது ராகு கேது பூஜையில் கலந்து கொண்ட அவர் ருத்ராபிஷேகம், மற்றும் கால பைரவர் அபிஷேகத்திலும் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து காலகஸ்தீஸ்வரனையும் ஞானபிரசன்னாம்பிகை அம்மையாரையும், கோவில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதியிலும் தரிசனம் செய்தார்.
மேலும் செய்திகள்: இரண்டாவது முறையாக பூஜையோடு துவங்கிய 'இந்தியன் 2 ' படப்பிடிப்பு! வைரலாகும் புகைப்படங்கள்.!
இதை தொடர்ந்து ரோஜாவுக்கு, வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் செய்து சுவாமியின் தீர்த்த பிரசாதங்கள், புகைப்படம் ஆகியவற்றை வழங்கினர். முன்பை விட தற்போது ரோஜா ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.