ரத்தம் வரும் அளவிற்கு உதவி இயக்குனரை தாக்கிய சீரியல் நடிகர்... படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு..!

By manimegalai a  |  First Published Aug 24, 2022, 1:05 PM IST

பிரபல சீரியல் நடிகர், துணை இயக்குனரை அடித்த சம்பவம் சீரியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


'இதயத்தை திருடாதே' தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் சீரியல் நடிகர் நவீன். தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ட நாள் முதல்' என்கிற தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் சீரியலை தாண்டி, பூலோகம், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடித்து கிடைத்திடாத, பிரபலத்தை இவருக்கு பெற்று தந்தது என்னவோ சீரியல்கள் தான். 

மேலும் செய்திகள்: அடேங்கப்பா? விமானநிலையங்களில் முக்கிய கான்ட்ராக்டை கைப்பற்றி பல கோடி லாபம் பார்க்கும் சூர்யா!

Tap to resize

Latest Videos

இந்த சீரியலில்  படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தான் நடிகர் நவீன் துணை இயக்குனரை தாக்கியுள்ளார். இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் எடுக்கப்பட்டு வரும் 'கண்ட நாள் முதல்' சீரியல் மிக குறுகிய நாட்களிலேயே, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் இதுவும் ஒன்று. இந்த சீரியலின் படப்பிடிப்பு... சென்னை கிருஷ்ணா நகரில் நடந்து வந்த போது தான் நடிகர் நவீன், துணை இயக்குனரை தாக்கியுள்ளார்.

இது குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவலில், நடிகர் நவீனை மதிய உணவு இடைவேளைக்கு பின்னர், படப்பிடிப்பு தளத்திற்கு வர தாமதம் ஆனதால் அவர் நடிக்க வேண்டிய காட்சிக்காக உதவி இயக்குனர் குலசேகரன் என்பவர் நவீனை அழைக்க சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென கோபமான நவீன், உதவி இயக்குனரை பலமாக அறைந்ததில் குலசேகரனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டதோடு, படப்பிடிப்பும் அப்படியே நிறுத்தப்பட்டது. உடனடியாக குலசேகரனுக்கு பட குழுவினர் முதலுதவி அளித்தனர்.

மேலும் செய்திகள்: ஆண்டி ஆனாலும் அடங்காத மீரா ஜாஸ்மின்..! 40 வயதில் டாப் ஆங்கிள் போஸில்... மூட் அவுட் செய்த போட்டோஸ்!
 

இந்த சம்பவம் தொடர்பாக உதவி இயக்குனர் குலசேகரன், சின்னத்திரை இயக்குநர் சங்கத்திலும், சென்னை மதரவாயில் காவல்நிலையத்திலும் புகார் அளித்தார். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். நவீன் தொடர்ந்து இந்த சீரியலில் நடிப்பாரா அல்லது விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது... சமீபத்தில் தான் சீரியல் நடிகர் நவீனுக்கும், செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

click me!