
பாலிவுட் திரையுலகிற்கு இந்த ஆண்டு மிகவும் சோகமான ஆண்டாகவே அமைந்துள்ளது. அங்கு ரிலீசாகும் படங்கள் அனைத்தும் வரிசையாக பிளாப் ஆகி வருவதால் தயாரிப்பாளர்கள் அனைவரும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அங்கு பாய்காட் டிரெண்டும் சமீப காலமாக அதிகரித்து உள்ளது. இதுவும் படங்களின் தோல்விக்கு பெரும் பங்காற்றி உள்ளன.
சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் இந்தியில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது. இதற்கு பாய்காட் டிரெண்டும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அமீர்கானின் சர்ச்சை பேச்சை சுட்டிக்காட்டி அப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் எதிரொலியாக படமும் படுதோல்வி அடைந்தது.
இதையும் படியுங்கள்... இந்தியன் 2-வை தட்டித்தூக்கிய உதயநிதி... கமலின் கெத்தான போஸ்டருடன் ஷூட்டிங் அப்டேட்டை வெளியிட்ட ஷங்கர்
தற்போது அதே ஒரு நிலை தான் ஆலியா பட் ரன்பீர் கபூர் நடித்துள்ள பிரம்மாஸ்திரா படத்துக்கும் வந்துள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆலியா பட், என்னை பிடிக்கவில்லை என்றால் என்னுடைய படத்தை பார்க்காதீர்கள் என திமிராக பேசியுள்ளது தான் தற்போது அப்படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அவரின் இந்த பேட்டியை டிரெண்ட் ஆக்கி வரும் நெட்டிசன்கள் பாய்காட் பிரம்மாஸ்திரா என்கிற ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் படக்குழு கலக்கம் அடைந்துள்ளது. பிரம்மாஸ்திரா ரூ.500 கோடியில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட படமாகும். இப்படத்தை மூன்று பாகங்களாக வெளியிட திட்டமிட்டு உள்ளனர். தற்போது ஆலியா பட்டின் இந்த பேச்சால் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி வருவதால் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்துக்கு ஏற்பட்ட நிலைமை பிரம்மாஸ்திராவுக்கு ஏற்பட்டுவிடுமோ என படக்குழு கலக்கம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... இந்தியன் 2-வில் இரண்டு முக்கிய மாற்றம் செய்த ஷங்கர்... விவேக் கேரக்டரில் நடிக்கப்போவது யார் தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.