'கபாலி' படத்தால் மன உளைச்சலுக்கு ஆளானதாக இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளது, திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய திரைப்படம் 'கபாலி', இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், வசூல் ரீதியாக ஓரளவு வெற்றிபெற்றாலும், கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் இன்று இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில். இதில் பேசிய பா.ரஞ்சித் 'கபாலி' படத்தின் மூலம் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய இவர், 'ஜெய்பீம்', என்கிற ஒரு வார்த்தை தான் தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துதாகவும், 'அட்டகத்தியில்' துவங்கி 'நட்சத்திரம் நகர்கிறது' வரை தன்னை அழைத்து வந்துள்ளது.
மேலும் செய்திகள்: இளைஞர்கள் தற்கொலை முடிவு? 'கோப்ரா’ ரசிகர்கள் சந்திப்பு விழாவில் மாணவர்கள் கேள்விக்கு விக்ரம் கொடுத்த பதில்!
ஒரு படத்தை நாம் நினைத்தபடி எடுக்க முடியும் என எனக்கு கற்றுக் கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு தான். சென்னை 28 திரைப்படம் தான் தன்னுடைய வாழ்வை செதுக்கியதாகவும், இசை வெளியீட்டு விழாவில் கூறினார். மேலும் இயக்குனர் சசியிடம் உதவியாளராக இருந்தபோது அவர் தன்னை அவர் பக்கத்தில் உட்கார வைத்து மிகவும் மரியாதையாக பேசியது தனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதையே தான் நான் இன்று என் உதவியாளர்களிடம் தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன்.
மேலும் செய்திகள்: விக்ரமை காண திருச்சியில் கூடிய ரசிகர்கள்..! போலீசார் லத்தியால் அடித்து துரத்தியதால் பரபரப்பு..! வைரல் வீடியோ..
அதேபோல் தன்னுடைய வாழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் ஞானவேல் ராஜா ஆகிய இருவருமே மிகவும் முக்கியமானவர்கள். 'கபாலி' படத்தை இயக்கிய போது எனக்கு தயாரிப்பாளர் தாணு முழு சுதந்திரம் கொடுத்தார். 'கபாலி' படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும், எனக்காக அதை ஒப்புக்கொண்டார் என கூறினார். படம் வெளியாகி ஹிட் என்று சொன்னாலும் இண்டஸ்ட்ரியல் பெரிதாக பேசப்படவில்லை என்பதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அப்போது கலைப்புலி தாணு, தன்னை அழைத்து படத்தின் வசூல் விபரங்கள் குறித்து தன்னிடம் பேசி தன்னை ஊக்கப்படுத்தினார் என தெரிவித்துள்ளார். தன்னுடைய முதல் அறிமுக படமான 'அட்டகத்தி' படத்தை ஞானவேல் ராஜா வெளியிடவில்லை என்றால், இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது என மிகவும் உணர்வு பூர்வமாக பேசி உள்ளார் பா ரஞ்சித்.