கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய கையோடு தனுஷ் பட நாயகியாக மாறிய மைனா...

Published : Aug 23, 2022, 06:10 PM ISTUpdated : Aug 23, 2022, 06:13 PM IST
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய கையோடு தனுஷ் பட நாயகியாக மாறிய மைனா...

சுருக்கம்

இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கும் மைனா,  தேன்மொழி பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நந்தினி. விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த சரவணன் மீனாட்சி ரோலில் நடித்திருந்தார். இந்த நாடகமே இவருக்கு அடையாளம் கொடுத்தது என்று சொல்லலாம். மைனாவாக பட்டி தொட்டி எல்லாம் புகழ்பெற்ற இவரது  மைனா நந்தினி என்றே மாறிப்போனது.

பின்னர் விஜய் டிவியில் முக்கியமான ரோல்களில் அவ்வப்போது தோன்றி வந்த மைனா நந்தினி சமீபத்தில் தான் தாயானார். இதை அடுத்து தனது கணவருடன் முக்கிய டிவி நிகழ்ச்சிகளில்பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அதோடு சில ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளனியாகவும் பணியாற்றி வருகிறார் மைனா.

மேலும் செய்திகளுக்கு...9 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலர் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கும் சர்ச்சை நடிகர்

இதற்கிடையே சினிமா துறையிலும் அறிமுகமாகிவிட்ட இவர் சமீபத்தில் கார்த்தியின் விருமன் படத்தில் நாயகனின் அண்ணன் மனைவியாக நடித்திருப்பார். இவரது நடிப்பு மிகவும் முக்கிய கதாபாத்திரமாக அமைந்திருந்தது. சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்திலும் கலக்கிக் கொண்டிருக்கும் மைனா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக தான் இருக்கிறார். அவ்வப்போது தனது பிள்ளையுடன் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருகிறார். அதோட நடன கலைஞரான இவரது கணவரோடும் வீடியோக்களை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு....திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் பாரதிராஜா ....என்ன காரணம் தெரியுமா?

ஒரு படத்தின் பாடல் ஹிட் ஆனால் அந்த பாடலை கண்டிப்பாக ரீல்ஸ் செய்வது பாரம்பரியமாகி விட்டது.   அதன்படி தற்போது விருமன் படத்தின் தேன்மொழி பாடல் ஹிட்டாகி வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கும் மைனா,  தேன்மொழி பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த பதிவு ரசிகர்களை இடம் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக தன் பிள்ளை மற்றும் கணவருக்கு கிருஷ்ணர் வேடமிட்டு வெண்ணை பூசி மகிழ்ந்திருந்தார். இந்த பதவையும் தனது இன்ஸ்டால் பதிவிட்டிருந்தார். 

மேலும் செய்திகளுக்கு....உள்நாட்டு சுற்றுப்பயணத்தை துவங்கிய சீயான்..எதற்காக தெரியுமா

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆக்‌ஷனில் இறங்கிய பாண்டியன்: போதுமுடா சாமி…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ!
அகண்டா 2 பொங்கலுக்கு வந்தால் யாருக்கு நஷ்டம்? விஜய், பிரபாஸ், சிரஞ்சீவி போட்டி!