பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனை அட்டாக் பண்ணிய கொரோனா

By Ganesh A  |  First Published Aug 24, 2022, 7:11 AM IST

Amitabh Bachchan : பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சன், தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


கொரோனா எனும் கொடிய வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்து படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவிய அந்த வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. அதன் கோரப்பிடியில் இருந்து மீள ஊரடங்கு விதிக்கப்பட்ட போதிலும் பல லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கிவிட்டது.

அந்த கொடிய நோய் பரவி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆக உள்ள போதிலும் அதன் பாதிப்பு இன்னும் முழுமையாக குறைந்தபாடில்லை. அது உருமாறிக்கொண்டே இருப்பதனால் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதும் மிகவும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும் முன்பை விட தற்போது பாதிப்பு வீதம் பெருமளவு குறைந்துள்ளது என்பது சற்று ஆறுதலான விஷயம்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... வாவ் மணப்பெண்ணாக மாறிய யாஷிகா ஆனந்த்..ஜொலிக்கும் நாயகியின் கிளிக்ஸ்

திரைப்பிரபலங்கள் சிலர் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் ஷூட்டிங்கில் பங்கேற்கும்போது மாஸ்க் அணிய முடியாத சூழல் உள்ளதால் அவர்களுக்கு ஈஸியாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது. அந்த வகையில் தற்போது பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

T 4388 - I have just tested CoViD + positive .. all those that have been in my vicinity and around me, please get yourself checked and tested also .. 🙏

— Amitabh Bachchan (@SrBachchan)

இதனை அவரே தனது டுவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “எனக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிடிவ் என வந்துள்ளது. என் அருகில் இருந்தவர்களும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தயவு செய்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அடேங்கப்பா? விமானநிலையங்களில் முக்கிய கான்ட்ராக்டை கைப்பற்றி பல கோடி லாபம் பார்க்கும் சூர்யா!

click me!