பிரமாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி தற்போது கதாநாயகியாக உள்ள நிலையில், இவர் மேடையில் 'ஆலுமா டோலுமா' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
எம்பிபிஎஸ் பட்டதாரியான இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, யாரும் எதிர்பாராத விதமாக தற்போது தமிழ் திரை உலகில் கதாநாயகியாக நுழைந்து ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமான 'விருமன்' திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக அதிதியின் நடிப்பு மற்றும் நடனத்தை அனைத்து ரசிகர்களும் பாராட்டி கொண்டாடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்: பணத்துக்காக அதிக ஆண்கள் சகவாசம்... அடிக்கடி கருக்கலைப்பு செய்யும் நடிகை ஓவியா! பரபரப்பை ஏற்படுத்திய பயில்வான்!
மிகவும் கலகலப்பான பெண்ணாக இருக்கும் அதிதி ஷங்கர், பேட்டிகளில் கூட மிகவும் உற்சாகமாக துரு துருவென பேசுகிறார். இவரது இந்த சுபாவத்தையே பல ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். ஆட்டம் பாட்டம் என அனைத்திலும் தனித்துவமாக இருக்கும் அதிதி ஷங்கர், தற்போது மேடையில் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: ஒரே இயக்குனர் இயக்கத்தில் மட்டும் 17 படங்கள் நடித்த கேப்டன் விஜயகாந்த்! 70 சதவீதம் ஹாட்... முழு விவரம் இதோ..!
அதிதி சங்கர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதமாக மேடையில் அஜித்தின் அசத்தலான இந்த பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டத்தை போட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் அதிதி 'விருமன்' படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடிக்கிறார். இதை தொடர்ந்து இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க சில முன்னணி இயக்குனர்களும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிதி நடிக்க உள்ள படங்கள் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Queen rocking dance for "AALUMA DOLUMA" Song In College Event 💥😍 pic.twitter.com/zsauzJHbIh
— AditiShankar Fans Club (@AditiFansPage)