தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் திரு. லலித் குமார் இப்படத்தை தயாரித்து உள்ளார்.
இந்திய சினிமாவை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், லியோ படம், ஒரு பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது என்றே கூறலாம். இந்த 2023ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக மாறியுள்ளது லியோ. கடந்த சில நாட்களாக இந்த படத்தில் இருந்து தினமும் ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச்சை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளது. இதனை முதலில் மதுரையில் மாநாடு போல நடத்த உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் அந்த திட்டத்தை கைவிட்ட படக்குழு மலேசியாவில் நடத்தலாம் என முடிவு செய்து அதற்கான பணிகளை செய்து வந்தது. ஆனால் அங்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக தற்போது அதிரடி முடிவு ஒன்றை படக்குழு எடுத்தது.
இறுதியாக சென்னையில் லியோ பட இசை வெளியீடு நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சவுக்கு சங்கர் சில மணிநேரத்திற்கு முன்பு ஒரு பதிவினை வெளியிட்டார். அதில் விஜய் அவர்களின் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி நேரு உன் விளையாட்டு அரங்கில் நடக்க விருப்பதாகவும்.
ஆனால் இதுவரை அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அவர் அந்த பதிவில் கூறியிருந்தார். மேலும் திமுகவினர், லியோ திரைப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு, நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு உள்ளிட்ட இடங்களின் விநியோகஸ்த உரிமைகளை கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கூறியதாகவும் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார்.
Sir, this is to clarify that this news is not true.. https://t.co/3qF7hBiviQ
— Seven Screen Studio (@7screenstudio)இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில். லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான Seven Screen Studios நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் சவுக்கு சங்கர் அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில், "சார் இந்த செய்தி உண்மை அல்ல" என்று கூறி பதில் அளித்துள்ளது.