தீபாவளி ரேஸில் இருந்து விலகிய... 'அயலான்' படத்தின் ரிலீஸ் குறித்து அறிவித்த படக்குழு!!

Published : Sep 23, 2023, 05:13 PM IST
தீபாவளி ரேஸில் இருந்து விலகிய... 'அயலான்' படத்தின் ரிலீஸ் குறித்து அறிவித்த படக்குழு!!

சுருக்கம்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.  

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திரைப்படம் 'அயலான்'. ஏலியனை மையமாக வைத்து, சயின்ஸ் பிக்சன் படமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை, இயக்குனர் ரவிக்குமார் இயக்க, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Ajith: அஜித்துடன் விஜய் டிவி சீரியல் ஹீரோ! பிறந்தநாள் பார்ட்டியில் கிடைத்த தல தரிசனம்.. வைரலாகும் போட்டோஸ்!

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன்  பணிகள் துவங்கின. இப்படம் ஒரு சயின்ஸ் பிக்சன் படம் என்பதாலும், ஏலியன் பற்றிய கதை என்பதாலும், இப்படத்தில் அளவுக்கு அதிகமான சிஜி மற்றும் கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால், இவற்றை நேர்த்தியாக வடிவமைக்க ரிலீசுக்கு தாமதமாவதாக படக்குழு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் பணிகள் ஒரு வழியாக முடிவடைந்து, இப்படம் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

Vanitha: அச்சச்சோ... சமந்தாவை போல் அரியவகை நோயால் அவதிப்படும் வனிதா விஜயகுமார்! அவரே கூறிய அதிர்ச்சி தகவல்!

ஆனால் திடீரென ஒரு சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவதாக படக்குழு அறிவித்தது.  இதனால் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாக்கி உள்ள, 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது உறுதியாகியுள்ளது. தீபாவளி ரேசில் இருந்து வெளியேறிய 'அயலான்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சற்றுமுன் இதுகுறித்து வெளியான தகவலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையாவது சொன்ன தேதியில் படம் வெளியாகும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!