ரஜினி படத்தில் சர்ச்சைக்குப் பின்னர் இணைக்கப்பட்ட அந்தப் பாடல்; நினைவு கூறும் பாடலாசிரியர் வைரமுத்து!!

By manimegalai aFirst Published Sep 23, 2023, 10:44 AM IST
Highlights

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ராஜா சின்ன ரோஜா' படத்தில் இருந்து, ஒரு பாடலை தயாரிப்பு குழு நீக்க முடிவு செய்த நிலையில், சர்ச்சைக்கு பின் இணைக்கப்பட்டு... அந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து கவிஞர் வைரமுத்து மனம் திறந்துள்ளார்.
 

கவிஞர் வைரமுத்து, அவ்வப்போது சமூக வலைத்தளத்தில்... தன்னுடைய பாடல்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், ரஜினிகாந்த் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான 'ராஜா சின்ன ரோஜா' படத்தில் இடம்பெற்ற, ஒரு  பாடல் முதலில் நீக்க முடிவு செய்யப்பட்டு, பின்னர் தன்னுடைய கட்டாயத்தின் பெயரில் இணைக்கப்பட்டு இந்த பாடலுக்கு சமூகத்தின் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததாக X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், வெளியான திரைப்படம் தான் 'ராஜா சின்ன ரோஜா'. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்திற்கு, பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதி இருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியக நடிகை கௌதமி நடிக்க,  முக்கிய வேடத்தில் ரகுவரன், ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், கோவை சரளா, பேபி ஷாலினி, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

அடுத்த குணசேகரன் யார்? சஸ்பென்ஸ் உடைக்க தயாரான இயக்குனர்.. பரபரப்பான எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்!

மேலும் இந்த படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். இவர் இசையில் இந்த படத்தில் இடம் பெற்ற.. 7 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் சமூக அக்கறையோடு இப்படத்தில் இடம்பெற்ற 'பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை' என்கிற வைரமுத்து வரிகளில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய பாடலை நீக்க வேண்டும் என இந்த படத்தை தயாரித்த ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் கூறியதையும், பின்னர் அந்த பாடல் இணைக்க பட்டது குறித்தும் வைரமுத்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

மயோசிட்டிஸ் சிகிச்சையால் சமந்தாவுக்கு ஏற்பட்ட புது பிரச்சனை! இனி இதுக்கும் தனி ட்ரீட்மெண்ட்.. அதிர்ச்சி தகவல்!

இதுகுறித்து அவரு போட்டுள்ள பதிவில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நான் எழுதிய ஒரு பாடல் படத்தின் வேகத்தைக் குறைக்கிறதென்றும் நீக்கப்படவேண்டுமென்றும் ஏவி.எம் நிறுவனம் முடிவுசெய்தது.  ஒரு கலைச்சோகம் என்னைச் சூழ்ந்தது போதைக்கு எதிரான அந்தப் பாடல் சமூக அக்கறைக்காக விருதுபெறும் என்று வாதிட்டு இடம்பெறச் செய்தேன். படம் வெளியானது... கிறித்துவப் பாதிரிமார்கள் அந்தப் பாடலைக் கொண்டாடி லயோலாக் கல்லூரியில் விருதளித்துப் பாராட்டினார்கள் என்னைத் தவிரப் பலரும் சென்று விருதுபெற்றார்கள். அந்தப் பாட்டு இன்று காலத்தின் தேவையாகிவிட்டது". என பதிவித்துளளார்.

click me!