அடுத்த குணசேகரன் யார்? சஸ்பென்ஸ் உடைக்க தயாரான இயக்குனர்.. பரபரப்பான எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்!

'எதிர்நீச்சல்' சீரியலில் அடுத்த ஆதி குணசேகரனாக நடிக்க உள்ள, அந்த பிரபலம் யார் என்பது, இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது.
 


சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து இறப்புக்கு பின்னர், புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியல். குறிப்பாக இயக்குனர் திருச்செல்லாம் யூகிக்க முடியாத கதையுடன் இந்த தொடரை கொண்டு செல்கிறார்.

ஜீவானந்தம் மனைவியை ஆதி குணசேகரன் தான் கொன்றார் என்கிற உண்மை கவுதமுக்கு தெரிய வருவது, குணசேகரன் வீட்டில் அதிரடியாக நுழையும் ஜான்சி ராணி, விசாலாட்சியின் மாற்றம், என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில்... இன்றைய எபிசோடில் என்ன நடக்க உள்ளது, என்பதை முன் கூட்டியே ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் புது புரோமோ வெளியாகியுள்ளது.

Latest Videos

மயோசிட்டிஸ் சிகிச்சையால் சமந்தாவுக்கு ஏற்பட்ட புது பிரச்சனை! இனி இதுக்கும் தனி ட்ரீட்மெண்ட்.. அதிர்ச்சி தகவல்!

நேற்றைய தினம், காரில் புதிய இடி வருகிறது கரிகாலன் கூறிய போது, குணசேகரனின் அண்ணன் என மற்றொரு கதாபாத்திரம் சேர்க்கப்படுமா? என பலரும் எதிர்பார்த்த நிலையில், ஈஸ்வரி, அதிரடியாக ஜீவானந்தத்தின் மகளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். இதை தொடர்ந்து இன்றைய புரோமோவில்  "அப்பத்தா யார் இந்த குழந்தை என ஈஸ்வரியிடம் கேட்க, நந்தினி ஃபிரென்ட்டோட பொண்ணு... அந்த ஃபிரென்ட் நம்ப எல்லோருக்குமே மியூச்சுவல் ஃபிரென்ட் என கூறுகிறார்.

ஜெமினி, சில்க், தேங்காய், ஜெயம் என.. படத்தின் பெயர் மற்றும் கேரக்டர் பெயரோடு அழைக்கப்படும் நடிகர்கள்!

இதனை கரிகாலன் ஜன்னல் வழியாக ஒட்டு கேட்டு கொண்டிருக்கிறார். ஆனால் நந்தினி கூறிய வார்த்தையிலே அப்பத்தாவுக்கு வெண்பா ஜீவானந்தத்தின் மகள் என்பது தெரிய வருகிறது. மற்றொரு புறம், ஒரு காவி வேஷ்டி - துண்டு அணிந்த ஒருவர் கதிர் மற்றும் ஞானத்திடம் தம்பிகளா என் கூட வாங்க என அழைக்க, அதற்க்கு ஞானம் கதிரை காரில் ஏறும்படி சொல்கிறார். பின்னர் அந்த காவி வேஷ்டி அணிந்தவர் மிகவும் கோவமாக கதிறு நில்லு என கூற... ஞானம் யாருப்பா நீ என கேட்க, அவர் குணசேகரனை பார்க்கணுமா வேண்டாமா என கேட்கிறார். இதன் மூலம், இன்னும் சில தினங்களில், புதிய ஆதி குணசேகரன் யார் என்பதை இயக்குனர் அறிவிப்பார் என தெரிகிறது. 

 

இன்றைய புரோமோ இதோ...

click me!