எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய ப்ரோமோவில், குணசேகரன் இல்லாமல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் பலர் மிஸ் யூசர் என கமெண்ட் மூலம், தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எதிர்நீச்சல் சீரியலின் தூணாக இருந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில், நடித்து வந்த நடிகர் மாரிமுத்து கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இவர் நடித்த கடைசி நாள் எபிசோட் நேற்று ஒளிபரப்பானது. இதனை சன் டிவி அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் குணசேகரின் கடைசி குரல் என பதிவிட்டு தெரிவித்திருந்தது.
தற்போது இந்த அழுத்தமான மற்றும் ஆளுமை நிறைந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல் பலரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடிப்பது மிகப்பெரிய சவாலான விஷயம் என கூறி வருகின்றனர். மேலும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் வேலராமமூர்த்தியை சன் டிவி குழு அணுகிய நிலையில், அவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால், இதுவரை அவர் நடிப்பது உறுதியாகவில்லை.
இது என்னடா ஷாருக்கானுக்கு வந்த சோதனை? இரண்டு முக்கிய இடங்களில் வசூலில் கோட்டை விட்ட 'ஜவான்'!
எனவே அடுத்ததாக பசுபதி மற்றும் ராதாரவி ஆகியோரிடமும் சீரியல் குழு பேசி வருகிறது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கு சம்பளத்தை வாரி கொடுக்கவும் தயாராக இருக்கிறது சன் டிவி தரப்பு. ஆனால், இதுவரை மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
நடிகர் தனுஷ், சிம்பு, உட்பட நான்கு முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்ட்..! திரையுலகில் பரபரப்பு..!
இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த புரோமோவை சீரியல் குழு வெளியிட்டுள்ளது. பொதுவாக ப்ரோமோக்களில் ஆதி குணசேகரனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் இன்றைய ப்ரோமோவில் குணசேகரன் காணப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஐ மிஸ் யூ சார் என கூறி வருவதையும் பார்க்க முடிகிறது. மேலும், இன்றைய எபிசோட் குறித்த புரோமோவில், ரேணுகா தன்னிடம் டான்ஸ் கற்றுக் கொள்ள வந்த மாணவிகளுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்துவிட்டு டீச்சரையும் அழைத்துக் கொண்டு மாடியில் இருந்து இறங்கி வருகிறார். அப்போது ஞானம் ரேணுகாவிடம் ஐஸ் எங்கே? என்று கேட்க, அதற்கு ரேணுகா என்ன சொல்வது என தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்கிறார். கரிகாலன் என்ன மண்டையை சொரியிறீங்க, கைய சொடக்கு போடுறீங்க என கூறுவது, ஞானத்திற்கு சந்தேகத்தை அதிகரிக்கிறது.
இதைத்தொடர்ந்து ரேணுகா தன்னுடைய கணவரிடம், உங்களுக்கு பயந்து பயந்து எல்லாம் என்னால இருக்க முடியாது. காலமெல்லாம் உங்க அண்ணனுக்கு கூஜா தூக்க முடிவு பண்ணிடீங்கள? அந்த வேலையை மட்டும் பாருங்க, என்று பேச... அதற்கு ஞானம் ஏய் என்று அடிக்க, கை ஓங்குகிறார். இதோடு இன்றைய ப்ரோமோ முடிவடைகிறது. எனினும் ரேணுகா டான்ஸ் வகுப்பு எடுப்பது இன்றைய தினம் வெளியே வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.