ரைட்டு விடு... ஒரே வார்த்தையில் ஓவராய் பேசிய குணசேகரனை அடக்கிய அப்பத்தா! எதிர்நீச்சல் அப்டேட்!

By manimegalai a  |  First Published Sep 5, 2023, 12:34 PM IST

செம்ம தில்லாக என்ட்ரி கொடுத்து, ஓவராக பேசி வரும் குணசேகரனை ஒரே வார்த்தையில் அடக்கி உள்ளார் அப்பத்தா. இது குறித்த புரோமோ தான் வெளியாகி வைரலாகி வருகிறது.
 


நாளுக்கு நாள் கூடுதல் பரபரப்புடன் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடரில் லேட்டஸ்ட் ப்ரோமோ வெளியாகி சீரியல் மீதான ஆர்வத்தை ரசிகர்களுக்கு தூண்டியுள்ளது.

நேற்றைய தினம் ஈஸ்வரியை விவாகரத்து செய்ய வேண்டும் என குணசேகரன் தன்னுடைய மாமன் உள்ளிட்ட ஊர் பெரியவர்கள் அனைவரையும் அழைத்து வைத்து பேசும்போது, அதிரடியாக வீட்டின் உள்ளே போலீசோடு என்ட்ரி கொடுத்தார் அப்பத்தா. உள்ளே வரும் அப்பத்தா இங்கே என்ன நடக்கிறது? என எதுவும் புரியாமல் கேட்க, ரேணுகா ஈஸ்வரி அக்காவை விவாகரத்து செய்ய போறாராம் என சொல்ல, அது இருக்கட்டும் அதுக்கு முன்னாடி சில முக்கியமான விஷயம் இருக்கு. அத பத்தி பேச வேண்டும் என்று அப்பத்தா சொல்லும் போதே சீரியல் மீதான எதிர்பார்ப்பு சூடு பிடித்தது.

Tap to resize

Latest Videos

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா - கிரண் உள்ளிட்ட 14 போட்டியாளர்கள்! பிரபலங்கள் பட்டியல் இதோ.!

குணசேகரன் பேச்சை கேட்டு வீட்டிற்கு வந்த பெரிய மனுஷங்க எல்லாரையும், வீட்டுக்கு போங்க நான் வேற ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டி இருக்கு என கூறும் அப்பத்தா, நீங்க உற்காந்து இருக்கிறது என்னுடைய இடம். 40 சதவீத பங்கில் இந்த இடமும் இருக்கு என கூறி குணசேகரனுக்கு திரும்பவும் அந்த விஷயத்தை நினைவு படுத்துகிறார்.

இதை தொடர்ந்து ஞானத்துக்கு போன் போட்டு குணசேகரன் வீட்டிற்கு வர வைக்க, அவர் வந்து யாரும் வேண்டாம் என்று தானே போனீங்க மறுபடியும் எதுக்கு வீட்டுக்கு வந்தீங்க என கேள்வி எழுப்ப, அப்பத்தா திரும்பவும் ஏன் வீட்டுக்கு வந்தார், என்ன செய்ய போகிறார் என்கிற எதிர்பார்ப்பு குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே இருக்கிறது.  ஞானம் குணசேகரனுக்கு ஆதரவாக பேசும் போது அப்பத்தா முதலில் நான் கொடுத்த 5 லட்சத்தில் தான் இந்த சம்பாத்தியம் எல்லாம் வந்துச்சு என கூறுகிறார். பின்னர் காரம் சாரமான விவாதம் அவர்களுக்குள் நடக்கிறது. கதிர் கொஞ்சம் ஓவராக போய் அப்பத்தா கழுத்தை நெரிக்க முயற்சி செய்ய, போலீசார் அவரை மிரட்டி உள்ளே தூக்கி வச்சிடுவேன் என பயம் காட்டுகிறார்கள்.

வசூலில் அடித்து நொறுக்கும் 'குஷி'.. உலகம் முழுவதும் மூன்றே நாட்களில் இத்தனை கோடி கலக்ஷனா? அதிகார பூர்வ தகவல்!

அப்பத்தா சில கண்டிஷன்களை சொல்ல வேண்டும் எனக்கு கூற, அதில் முக்கியமாக அந்த வீட்டின் மருமகள்களை அடித்து துன்புறுத்தும் என்கிட்ட சொத்து கேட்க தூது அனுப்பக்கூடாது என்றும், அதை போல் இனி இந்த வீட்டில் தான் சக்தியும் ஜனனியும் இருப்பாங்க என்று சொல்ல, அதெல்லாம் முடியாது என கதிரும் குணசேகரனும் கூறுகிறார். குணசேகரன் அப்போ நாங்க எல்லாம் வீட்டை விட்டுவிட்டு வெளில போய்டணுமா என கேட்க, அது உன் இஷ்டம்பா  என சிம்பிளாக கூறுகிறார். இந்த ஒற்றை வார்த்தைக்கு பின்னர் ரைட்டு விடு என குணசேகரன் பொட்டி பாம்பாய் அடங்கிவிடுகிறார். இதுகுறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
 

click me!