கனவுபோல் உள்ளது... புது கார் வாங்கிய குஷியில் குக் வித் கோமாளி மோனிஷா - அதோட விலை இத்தனை லட்சமா?

By Ganesh A  |  First Published Sep 3, 2023, 8:14 AM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த மோனிஷா, தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கி அதுகுறித்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.


விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கியவர் மோனிஷா. இருப்பினும் இவரை பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கோமாளியாக வந்து கலந்துகொண்டார் மோனிஷா. ஷிவாங்கி குக் ஆகிவிட்டதால், கோமாளியாக அவரது இடத்தை நிரப்பினார் மோனிஷா.

குறிப்பாக கடந்த சீசனில் ஷிவாங்கி மாதிரியே ஒரு எபிசோடில் மிமிக்ரி செய்திருந்தார் மோனிஷா. அது வேறலெவலில் ரீச் ஆனது. ஷிவாங்கியே ஷாக் ஆகும் அளவுக்கு அசத்தி இருந்தார் மோனிஷா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பணியாற்றும் போதே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் மூலம் சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்தார் மோனிஷா. அப்படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... குடிபோதையில் பிரபல நடிகை திரிஷா.. கேரவனுக்குள் டாப் நடிகருடன் தகராறு.. புட்டு புட்டு வைத்த பிரபல விமர்சகர்!

இந்நிலையில், தற்போது நடிகை மோனிஷா புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். கார் வாங்கியபோது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் மோனிஷா. அவர் வாங்கியுள்ளது ஹுண்டாய் நிறுவனத்தில் புதிதாக லாஞ்ச் செய்யப்பட்ட Exter மாடல் கார் ஆகும். அந்த காரின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

கார் வாங்கியது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், கடவுளுக்கு நன்றி, இப்போகூட இது கனவு மாதிரி தான் உள்ளது. ஏனெனில் மிடில் கிளாஸ் பொண்ணுக்கு இது மிகப்பெரிய விஷயம். எனக்கு நன்றாக நியாபகம் இருக்கு, சில வருடங்கள் முன் என் தந்தை பழைய கார் ஒன்றை வாங்கினார். அது அங்கங்க நின்னுபோகும், நாங்க இறங்கி தள்ளி தான் ஸ்டார்ட் பண்ணுவோம். அப்புறம் அது சுத்தமா ஓடல. அடுத்து பழைய நானோ கார் ஒன்றை வாங்குனோம், அதை காரா கூட மதிக்க மாட்டாங்க. ஆனா அந்த கார் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. புது கார் வாங்க வேண்டும் என்பது ஆசை, ஒருவழியாக அது நடந்துருச்சு என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் மோனிஷா.

இதையும் படியுங்கள்... படப்பிடிப்புகளுக்கு நடுவே அண்ணாமலையாரை தரிசித்த நடிகர் அருண் விஜய்

click me!