'எதிர்நீச்சல்' சீரியலில், இன்று ஈஸ்வரி உச்சகட்ட கோவத்தில் குணசேகரனிடம் பேசும் காட்சிகள் தான் புரோமோவில் வெளியாகியுள்ளது.
சன் டிவியில் தினம் தோறும் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியல் எதிர்பாராத திருப்பங்கள் அடுத்தடுத்து நடந்து வரும் நிலையில், இன்றைய ப்ரோமோ வெளியாகி அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஈஸ்வரியின் முன்னாள் காதலன் தான் ஜீவானந்தம் என்கிற தகவல், சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ஜீவானந்தத்தை சந்தித்து அப்பத்தாவுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என, ஜனனி, நந்தினி, ரேணுகா, ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும்போது... ஜனனி சந்தேகமாக அவர் நம்பை சந்திப்பாரா? என்று கூட தெரியாது என கூறினார். இதற்க்கு ஈஸ்வரி அவர் கண்டிப்பாக நம்மை சந்திப்பார் என கூறியது மட்டும் இன்றி, அந்த ஜீவானந்தம் தான் தன்னை முதலில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட நபர் என்கிற உண்மையையும் வெளிப்படுத்தினார்.
RS Shivaji Passed Away: அதிர்ச்சியில் திரையுலகம்..! பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..!
தற்போது இந்த தகவல் ஈஸ்வரியின் தந்தை மூலம் குணசேகரனுக்கு மட்டும் இன்றி ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் நேற்று தெரிய வந்தது. இதனால் நிலைகுலைந்து போன குணசேகரன், அடுத்து என்ன செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்திருக்கிறார்கள். மேலும் இன்றைய ப்ரோமோவும் இந்த சம்பவத்தை அடிப்படியாக வைத்தே வெளியாகி உள்ளது.
ஈஸ்வரி -ஜனனி ஆகியோர் ஜீவானந்தத்தையும், அவரின் குழந்தையையும் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழையும் போது, வெளியே அமர்ந்திருக்கும் குணசேகரன் "அப்போ அந்த ஜீவானந்தம் உன்னிடம் சொல்லி அனுப்பி இருக்கானா? என்று கேட்க... அதற்கு கதிரும் ஆமா சொல்லி இருப்பான் என்று கூறுகிறார். இதனால் உச்சமட்ட கோபமடையும் ஈஸ்வரி ஏய் கதிர் மரியாதையா பேசு என்று கையை நீட்டி அடிக்க போகிறார், இதைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து ஈஸ்வரியின் மகனும் மகளுமான தர்ஷினி மற்றும் தர்ஷன் ஆகியோர் வீட்டுக்கு வரும்போது, குணசேகரன் ஈஸ்வரி ஏதோ தப்பு செய்தது போல் அவரை குற்றம் சாட்டும் விதத்தில் இங்கு நடக்கிற கூத்தையெல்லாம் பார்த்தீங்களா? என்று கேட்க... ஈஸ்வரி "மனுஷனாயா நீ எல்லாம் குழந்தைங்க கிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்க" என குணசேகரன் எதிர்த்து குரலை உயர்த்துகிறார்.
இதை தொடர்ந்து பேசும் குணசேகரன், உங்க அப்பா சரின்னு சொல்லி இருந்தா... என்று கேள்வி எழுப்ப, கல்யாணம் பண்ணி இருப்பேன் என்று பதிலடி கொடுக்கிறார் ஈஸ்வரி. இதனால் குணசேகரன் அதிர்ந்து போய் எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து நிற்கிறார். இது ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது. இதனால் வரை குணசேகரன் எது செய்தாலும் வாயை மூடிக்கொண்டு இருக்கும் ஈஸ்வரி, தன்னை பற்றி குணசேகரன் அவதூறாக பேசுவதால் பொங்கி எழுந்துள்ளதற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.