ஜீவானந்தம் தான் ஈஸ்வரிய காதலித்தவன்.! குணசேகரனுக்கு தெரிய வரும் உண்மை! அடுத்து நடக்க போவது என்ன?

By manimegalai a  |  First Published Sep 1, 2023, 3:07 PM IST

ஜீவானந்தம் யார் என்கிற உண்மை சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது அந்த ஜீவானந்தம் தான் தன்னுடைய மனைவி ஈஸ்வரியின் முன்னாள் காதலன் என்கிற உண்மை, குணசேகரனுக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
 


எதிர்பாராத பல திருப்பங்களுடன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியல் 500 எபிசோடுகளை எட்டியுள்ளது. இதனை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளத்தில், வெளியாக ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

யாரும் எதிர்பாராத வகையில், அடுத்தடுத்து... பல திருப்பங்கள் இந்த சீரியலில் நடந்து வரும் நிலையில், நேற்றைய தினம் ஜீவானந்தத்தை ஈஸ்வரி மற்றும் ஜனனி பார்த்து பேச சென்ற போது, ஜீவானந்தத்தின் மகள் வெண்பா, ஈஸ்வரியை பார்த்து "நீங்க எங்க அம்மா மாதிரி இருக்கீங்க" என கூறி அழுததும், அவர் வெண்பாவை கட்டி பிடித்து இனி அழக்கூடாது என, எமோஷனல் வசனங்கள் பேசியது ஒரு தாய்யுணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தது.

Latest Videos

அதிர்ச்சி... பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

இதை தொடர்ந்து இன்னொரு பக்கம்... கரிகாலனையும் - ஆதிரையையும் ஹனி மூன் அனுப்பி வைக்க குணசேகரன் முடிவு செய்துள்ளார். இதற்கு ஆதிரை ஒப்புக்கொள்ளாததால்.. அவரை கொன்று விடுவேன் என சூசகமாக சொல்லி அதிரவைத்தார். தொடர்ந்து ரசிகர்கள் சற்றும் யூகித்து பார்க்க முடியாத கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் சைலண்டாக என்ட்ரி கொடுத்து ஆதி குணசேகரனையே ஆட்டம் காண வைத்துள்ளார் ஈஸ்வரியின் தந்தை.

ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவிலா கிட்ட கூட வர முடியாது! பணக்கார நடிகை ஜெயலலிதாவின்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

திடீர் என குணசேகரனை சந்திக்க வீட்டிற்கு வரும் ஈஸ்வரியின் தந்தை, உன்னுடைய சொத்தை ஆட்டையை போட்டது யார் தெரியுமா, ஈஸ்வரியை காதலிப்பதாக என்னிடம் பெண் கேட்டு வந்த ஜீவானந்தம் தான் என கூறுகிறார். இதற்க்கு குணசேகரனின் தாய் விசாலாட்சி, உங்களுக்கு எங்க எதை பேச வேண்டும் என தெரியாதா என கேட்க, குணசேகரன் சைலண்டாக வாசல் படியில் சோகமாக அமரும் காட்சி காட்டப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ரேணுகா போன் செய்த் ஈஸ்வரிக்கு தெரிவிக்க... அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

click me!