ஈஸ்வரியை பார்த்து வெண்பா சொன்ன வார்த்தை..! ஷாக்கான ஜீவானந்தம்... 'எதிர்நீச்சல்' சீரியலின் லேட்டஸ்ட் அப்டேட்!

By manimegalai a  |  First Published Aug 31, 2023, 2:56 PM IST

எதிர்நீச்சல் தொடரின் ஆகஸ்ட் 31-ஆம் தேதியின் எபிசோட் குறித்த புரோமோ வெளியாகி உள்ளது.
 


சன் டிவி-யில், ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர், எதிர்பாராத திருப்புமுனைகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் ஜீவானந்தத்திடம் இருந்து சொத்துக்களை வாங்கி விட வேண்டும் என குணசேகரன் திட்டம் போட்டுக்கொண்டிருக்க, குணசேகரன் வீட்டு பெண்களோ... முழுக்க முழுக்க ஜீவானந்தத்திற்கு ஆதரவாக இருக்க நினைக்கிறார்கள்.

அப்பத்தா தற்போது ஜீவானந்தத்தின் பாதுகாப்பில் இருப்பதால், அவருக்கு குணசேகரன் மூலம் ஆபத்து வர வாய்ப்புள்ளது என எச்சரிக்கும் விதமாக... நந்தினி, ரேணுகா, ஜனனி, ஈஸ்வரி ஆகியோர் ஜீவானந்தத்தை பார்க்க சென்றனர். ஜீவனந்தத்தின் மகளை பார்த்ததும், வெண்பா தன்னுடைய தாயை இழந்து தவிப்பதற்கு தன்னுடைய கணவன் கதிரும் ஒரு காரணம் என்பதை நினைத்து, அவரை கட்டி பிடித்து அழுதது, ரசிகர்கள் மனதையே கலங்க வைத்தது.

Tap to resize

Latest Videos

ஷாருக்கானை பல வருஷம் கரம் வச்சு பழி தீர்த்த விஜய் சேதுபதி! இப்படி ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரியை எதிர்பார்க்கல!

மற்றொரு புறம் ஜான்சி ராணி தன்னுடைய மகனின் வாழ்க்கைக்காக குணசேகரனிடம் வந்து சண்டை போடுகிறார். பொதுவாக தன்னை எதிர்த்து யார் பேசினாலும், வெட்டிவிடுவேன்... சாச்சுவிடுவேன் என வீர வசனம் பேசும் குணசேகரன், ஜான்சி ராணி உருட்டி மிரட்டியபோது பள்ளு புடுங்கிய பாம்பு போல் அமர்ந்திருந்தது ஹை லைட். மேலும் ஒருவழியாக ஜான்சி ராணியை சமாளித்து, கரிகாலனையும் - ஆதிரையையும் ஹனி மூன் அனுப்பி வைப்பதாக தெரிவித்திருந்தார். 

பேராபத்தில் சிக்கிய கயல்..! தங்கையை காப்பாற்ற எடுக்க போகும் அதிரடி முடிவு? கேள்விக்குறியாகும் எழில் வாழ்க்கை!

இந்நிலையில் இன்றைய புரோமோவில், ஜனனி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் ஜீவனந்தத்தின் வீட்டில் அமர்ந்துள்ளனர். வெண்பா ஈஸ்வரியை பார்த்துக்கொண்டு அவரை  செல்கிறார். இன்னொரு புறம் ஆதிரை ஹனி மூன் செல்ல மாட்டேன் என பிரச்சனை செய்கிறார். இது பற்றி தெரிந்ததும், இந்த வீட்டில் நான் சொல்லும்படி தான் இருக்க வேண்டும். இல்லனா உன் பொண்ணு உனக்கு இல்லமா என சொல்கிறார் குணசேகரன்.

79-ஆவது பிறந்தநாளை மகள்களுடன் கொண்டாடிய பழம்பெரும் நடிகர் விஜயகுமார்! வைரலாகும் பர்த்டே போட்டோஸ்!

ஜீவானந்தத்தின் மகள் வெண்பா... ஈஸ்வரியை பார்த்து நீங்க என்னுடைய அம்மா மாதிரியே இருக்கீங்க என கூறியதும், அவரை கட்டி பிடித்து, அழ கூடாது என சமாதானம் செய்கிறார் ஈஸ்வரி. இதை பார்த்ததுமே ஜீவானந்தம் உறைந்து போய் நிற்கிறார். இதுகுறித்த காட்சி தான் தற்போது புரோமோவில் வெளியாகி இன்றைய எபிசொட் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

click me!