கடந்த சீசனில் கமல் ரூ.75 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த சீசனில் கிட்டத்தட்ட தனது சம்பளத்தை டபுளாக கமல்ஹாசன் உயர்த்தி உள்ளார்.
ரசிகர்கள் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியும் ஒன்று. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். பரபரப்பு, பொழுதுபோக்கிற்கும் பஞ்சமே இருக்காது என்பதால் பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. வழக்கம் போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டிருந்தது. அதில் 2 பிக்பாஸ் வீடு என்று கூறி கமல்ஹாசன் ட்விஸ்ட் வைத்திருந்தார். எனவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மறுபுறம், இந்த பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் தயாராகி வருகிறார். இந்த சூழலில் பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கமல்ஹாசன் 130 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக கமல் 130 கோடி ரூபாய் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த சீசனில் கமல் ரூ.75 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த சீசனில் கிட்டத்தட்ட தனது சம்பளத்தை டபுளாக கமல்ஹாசன் உயர்த்தி உள்ளார்.
கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 உட்பட மிகவும் எதிர்பார்க்கப்படும் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹெ.ச், வினோத், மணி ரத்னம் ஆகியோர் படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளார். மேலும், தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கீழ் பல படங்களை தயாரிக்கவும் உள்ளார். மேலும், தற்போது கல்கி 2898 கி.பி படத்தில் நடித்து வருகிறார். சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அஜித் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்க.. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சொன்ன பதில் என்ன தெரியுமா?
இதனிடையே பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்கின்றனர் என்பது குறித்து பல தகவல்கள் சமூக வலைதலங்களில் வலம் வருகிறது. அதன்படி இந்த முறை மாகபா ஆனந்த், ஜாக்குலின், நடிகர் பிருத்விராஜ், ட்ரெண்டிங் டிரைவர் ஷர்மிளா, பயில்வான் ரங்கநாதன், நடிகர் சந்தோஷ் பிரதாப், தொகுப்பாளர் ரக்ஷன், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், காக்கா முட்டை விக்னேஷ், நடிகையும் மாடலுமான தர்ஷா குப்தா, நடிகைகள் உமா ரியாஸ், சோனியா அகர்வால், ரோஷினி (சீரியல் நடிகை), அம்மு அபிராமி, ரேகா நாயர், ரவீனா தாஹா, நிலா மற்றும் பிக் பாஸ் 6 போட்டியாளர் ரச்சிதாவின் கணவர் தினேஷ், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், விஜய் டிவி காமெடியன் சரத் ராஜ் ஆகியோர் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி செப்டம்பர் 17 அல்லது 24-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. எனினும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.