பாக்கிய லட்சுமி சீரியலின் புதிய புரோமோ வெளியாகி உள்ளது. இதில் மயூவுக்காக கோபி இனியாவுக்கு நோ சொல்லி உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பாவம் கோபிக்கு தான் அடுத்தடுத்த பிரச்சனைகள் வரிசை கட்டி வந்து, விளாசி தள்ளுகிறது.
கோபியிடம் இருந்து பாக்கியா விவாகரத்து பெற்று சென்ற பின்னர், நேர்மையான வழியில் மகன்கள் மற்றும் மருமகள்கள் உதவியுடன் முன்னேறி சென்று கொண்டே இருக்கிறார். பாக்கியா தன்னுடைய மாமியார் ஈஸ்வரி பெயரில் ஆரம்பித்த ஒரு சின்ன மசாலா கம்பெனி, பின்னர் அடுத்தடுத்த சமயல்ஆடர்களை பெற்று கொடுத்தது. தற்போது, ராதிகா வேலை செய்யும் கம்பெனியில் கேட்டரின் வைத்து நடத்தும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.
'தனி ஒருவன் 2' ஹீரோயின் நயன்தாரா.. ஜெயம் ரவியை தேடி வரும் வில்லன் இவரா? எகிறும் எதிர்பார்ப்பு!
அதே போல் திருமணம் செய்து கொள்ளும் போது 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்த பாக்கியா இப்போது கல்லூரிக்கும் சென்று கொண்டிருக்கிறார். மகள் இனியாவில் கல்லூரியில் தான் பாக்கியாவும் படிக்கிறார். இனியாவுக்கு ஆரம்பத்தில் பாக்கியா படிப்பதில் இஷ்டம் இல்லை என்றாலும், பின்னர் அம்மாவின் ஆசையை புரிந்து கொண்டு சமாதானம் ஆகி விட்டார்.
தற்போது கல்லூரியில் படிக்கும் இனியாவுக்கு ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது. அதாவது கேரளா வரை ட்ரிப் சென்று அங்கு பார்க்கும் விஷயங்களை வைத்து இனியா ஒரு ஸ்கிரிப்ட் எழுத வேண்டும். இனியாவை கோபி அழைத்து செல்வதாக கூறி இருந்த நிலையில், அதற்காக ஆசை ஆசையாக ரெடி ஆகி இருந்தார். ஆனால் திடீர் என மயூ பெரிய மனுஷி ஆகிவிட்டதால்... ராதிகாவின் பேச்சை கேட்டு கொண்டு இனியாவை அழைத்து செல்ல முடியாது என கூறுகிறார். இனியாவும் உங்களுக்கு என்னை விட மயூ தான் முக்கியமா என் கேட்டு சண்டை போடுகிறார். கோபி ஒருவழியாக இனியாவை சமாதானம் செய்து, அவரை தன்னுடைய மூத்த மகன் செழியனுடன் ட்ரிப் அனுப்ப முடிவெடுக்கும் நிலையில்... அவரின் அந்த எண்ணம் ஈடேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.