சன் டிவியில் விறுவிறுப்பான கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது.
எத்தனையோ சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும், குறிப்பிட்ட சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஆணாதிக்கத்துக்கு எதிராக ஜனனி என்கிற தனி பெண் குரலை உயர்த்த, தற்போது அந்த குடும்பத்தில் உள்ள அணைத்து பெண்களும், குணசேகரனின் சுயரூபத்தை புரிந்து கொண்டு, அவருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருந்தாலும், தற்போது அப்பத்தாவின் 40 சதவீத சொத்து பிரச்சனை எதிர்பாராத பல திருப்பங்களுடன் சென்று சென்றுகொண்டிருக்கிறது. எப்படியும் தன்னிடம் இருந்து ஜீவானந்தம் கைப்பற்றிய அப்பத்தாவின் சொத்துக்களை மீண்டும் கைப்பற்றியே தீர வேண்டும் என்கிற வெறித்தனத்தோடு செயல்பட்டு வருகிறார் குணசேகரன். இதற்காக ஜீவானந்தத்தை கொலை செய்யும் அளவுக்கு துணிந்தார்.
ஜீவானந்தத்தை கொலை செய்யும் முயற்சியில், ஜனனியால் ஜீவானந்தம் காப்பாற்றப்பட்டாலும்... ஜீவானந்தத்தின் மனைவி சுட்டுக் கொல்லப்படுகிறார். ஜீவானந்தத்தை தேடி சென்ற போது, ஜனனி ஜீவானந்தத்தின் மறுபக்கம் குறித்து தெறித்து கொள்கிறார். இந்நிலையில் ஜனனி தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் ப்ரோமோ தான் தற்போது வெளியாகி உள்ளது.
நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி, சக்தி, ஆகிய நான்கு பேரிடமும்... ஜீவானந்தத்தை பற்றிய எல்லா விஷயங்களையும் சொல்கிறார். இவ்வளவு நல்லது பண்ணும் அவர் ஏன் இந்த சொத்துக்களை அவரின் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என நந்தினி கேட்க, அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும் அக்கா என ஜனனி சொல்கிறார். பின்னர் ஜனனி அழுது கொண்டே, ஜீவானந்தத்திற்கு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கும் என எனக்கு தெரியாது, அதோடு அவரை சுட வந்தவங்க அவருடைய மனைவியை சுட்டுட்டாங்க என்று சொல்லும் போது ஈஸ்வரி கண்கலங்கி அழுகிறார். எனினும் இதற்குப் பிறகாவது ஜீவானந்தம் தன்னுடைய முன்னாள் காதலர் என்பதை ஈஸ்வரி அனைவரிடமும் கூறுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேபோல் நேற்றைய தினம், கதிர் முதல் முறையாக தன்னுடைய அண்ணன் குணசேகரனை "அவகிட்ட என்ன சொன்னீங்க" என ஆவேசமாக குரலை உயர்த்தினார். இது அவரின் உண்மையான கோபமாக இருக்குமா? அல்லது நடிப்பாக இருக்குமா? என பலர் சமூக வலைதளத்தில் விவாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.