திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து! புதிய கார் வாங்கி பூஜை போட்ட சம்யுக்தாவின் ஆக்ரோஷ பதிவு!

By manimegalai a  |  First Published Aug 23, 2023, 12:07 AM IST

சீரியல் நடிகை சம்யுக்தா, திருமணமான ஒரே மாதத்தில் கணவரை விவாகரத்து செய்து... அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது புதிய கார் ஒன்றை வாங்கி அதற்க்கு பூஜை போட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆக்ரோஷ பதிவு மூலம் சிலருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
 


'சிப்பிக்குள் முத்து' சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தை, அதே சீரியலில் நடித்த போது நடிகை சம்யுக்தா  காதலித்து திருமணம் கொண்டார். திருமணம் ஆன ஒரே மாதத்தில், இவர்களின் திருமண உறவு விவாகரத்து வரை வந்த நிலையில், இதுகுறித்து முதலில் விஷ்ணுகாந்த் பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுக்க, இதற்க்கு விளக்கம் கொடுத்து, சம்யுக்தாவும் இன்ஸ்டா லைவில் வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்தார்.

பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராம் நேரலையில், ஒருவர் மீது ஒருவர் தாக்கி பேசிக்கொண்டு சமூக வலைத்தளத்தையே பரபரக்க செய்தனர். இவர்களின் சண்டையை வைத்து... கருத்து கூறுவதாக தங்களையும் பிரபலப்படுத்தி கொண்டனர் சிலர். அதே போல் பிடிக்காவிட்டால் சைலண்டாக இருவரும் பிரிந்து விட வேண்டும், இப்படி ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்த வேண்டாம் என சிலர் கூறினர். காரணம் இருவருமே காது கொடுத்து கேட்க முடியாத அளவிலான வார்த்தைகளையும், அவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றியும் பிரிந்து மேய்ந்தனர்.

Tap to resize

Latest Videos

என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டுகிறார்! பிரபல நடிகை மீது கணவர் பகீர் குற்றச்சாட்டு!

தற்போது இவர்களை பற்றிய பேச்சு ஓய்ந்து விட்ட நிலையில்... இருவருமே அவரவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்போது சம்யுக்தா முத்தழகு சீரியலில் நடித்து வருகிறார். விவாகரத்துக்கு பின்னர் பல சர்ச்சைகளில் சிக்கி அதில் இருந்து மீண்ட இவர் தற்போது... புதிய கார் ஒன்றை வாங்கி பூஜை போட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.

தனுஷ், லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அணியும் கருங்காலி மாலைக்கு இவ்வளவு பவரா?

அதில், "சுதந்திரமான கடின உழைப்பாளி பெண்ணால் முடியாதது எதுவுமில்லை. ஆம் நான் ஒப்புக்கொள்கிறேன்... ஒரு பெண் இந்த சமூகத்தில் உண்மையான இதயத்துடனும் தூய்மையான நோக்கத்துடனும் வாழ்வது மிகவும் சவாலானது. நாம் என்ன செய்தாலும்.., நிச்சயம் சிலர் நம்மை அவதூறாகப் பேசுவார்கள். அவர்களின் கேவலமான பேச்சுக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாய்கள் குரைக்கட்டும். யாரிடமும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் எவ்வளவு அழுக்கான இதயம் என்று அவர்களுக்கே தெரியும்.

விஜய் டிவியை காப்பி அடிக்கிறதா சன் டிவி? விரைவில் முடிவுக்கு வரும் சீரியலின் சீசன் 2 பணிகள் மும்முரம்!

கதறி அழும் நந்தினி ! குணசேகரனுக்கு எதிராக திரும்பிய கதிர்.. செம்ம ட்விஸ்ட்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!

உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள் மற்றும் உங்கள் சுயத்தை நம்புங்கள். ஒரே மாதிரியான கொள்கைகளை உடைக்கவும்! சுதந்திரத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்குங்கள். உங்களை முன்னுரிமையாக்குங்கள். அந்த ஆண் பேரினவாத கேடுகெட்டவர்களுக்கு முன்னால் ஒரு முதலாளிதுவம் கொண்ட பெண்ணாக இருங்கள். அவர்கள் தவறு என்று நிரூபியுங்கள். உங்கள் வெற்றி அவர்களுக்கு செருப்படியாக இருக்கட்டும். அங்குள்ள ஒவ்வொரு சுதந்திரமான கடின உழைப்பாளி பெண்களுக்கும் நிறைய சக்தி மற்றும் நேர்மறை எண்ணங்கள் உள்ளது. தைரியமாக இருங்கள், வலுவாக இருங்கள் மற்றும் உங்கள் சாதனைகள் பேசப்படும் என பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு மற்றும் வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
 

 

click me!