'எதிர்நீச்சல்' சீரியலில் ஒவ்வொரு நாளும் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி இன்றைய எபிசோட் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
சன் டிவி தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு, ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'எதிர்நீச்சல்'. ஆரம்பத்தில் இந்த சீரியல் சில விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், தற்போது பல பிரபலங்கள், இளம் ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடராக மாறி உள்ளது. ஆணாதிக்கத்தை எதிர்த்து, பெண்கள் போராட வேண்டும் என்கிற கருத்தை ஆணித்தனமாக அடித்து கூறும் விதமாகவே இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே ஆணாதிக்க குணத்துடன் இருப்பவர் ஆதி குணசேகரன். தன்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவருமே தனக்கு கீழே தான் இருக்க வேண்டும், தன்னை பார்த்தால் பயந்து நடுக்க வேண்டும் என நினைப்பவர். இவரின் சுய ரூபம் பற்றி தெரிந்து கொண்ட ஜனனி முதல் முறையாக இவருக்கு எதிராக பேச துவங்கினார். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே வெளியேறிய இவர்... அப்பத்தாவால் மீண்டும் குணசேகரன் வீட்டிற்கு வரும் படி ஆனது.
ஆதிரையின் திருமணத்தை பணயமாக வைத்து, அப்பத்தாவின் மொத்த சொத்தையும் ஆட்டையை போட நினைத்தார் குணசேகரன். நினைத்ததை முடித்த பின்னர், பல சூழ்ச்சிகள் செய்து திருமணத்தை நிறுத்தி, ஆதிரையை தன்னுடைய விருப்பப்படி கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்தார். குணசேகரனின் சூழ்ச்சியால் மனம் உடைந்து போன, அப்பத்தா கோமா நிலைக்கு சென்றார். இதைத்தொடர்ந்து தற்போது அப்பத்தாவின் 40% சொத்துக்கள், முழுமையாக தன்னுடைய பெயருக்கு வரவில்லை என்பதை அறிந்ததும், ஜீவானந்தம் அனைத்து சொத்துக்களை கைப்பற்றி விட்டதால், அவரை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விட்டார்.
ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட ஒரு பக்கம் கதிர் மற்றும் வளவன் ஆகியோர் அடியாட்களுடன் வர... மற்றொரு பக்கம் ஜனனி ஜீவானந்தத்தை சந்தித்து பேச வருகிறார். குணசேகரன் அனுப்பிய ஆட்கள், ஜீவானந்தத்தை தக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இன்றைய புரோமோவில், ஜீவானந்தம் தன்னுடைய மனைவிக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்துவிட்டு மகளுடன் கண்கலங்கி நிற்கிறார். இதை பார்த்து ஜனனி, "இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது... நீங்கள் கெட்டவர் கிடையாது என கூறுகிறார். இதற்கு ஜீவானந்தம், இப்போது கூட உங்களுக்கு முக்கால் வாசி தான் தெரியும் என பதில் கூறுகிறார்.
ஒரே ஆண்டில் முடிந்த திருமண வாழ்க்கை... 50 வயசுல அடுத்த கல்யாணமா? ஓப்பனாக சொன்ன நடிகை சுகன்யா
இன்னொரு பக்கம் அப்பத்தா வயதானவர் உடல்நிலை முடியாதவர் என்பதை கூட கவனத்தில் கொள்ளாமல் குணசேகரன் அவரை ரூமில் அடைத்து வைத்திருக்கிறார். இதை எதிர்த்து ரேணுகா மற்றும் நந்தினி ஆகியோர் கேள்வி எழுப்ப, குணசேகரன் யாருன்னு தெரியாது என மிகவும் கோபமாக பேசுகிறார். ஜீவானந்தம் நல்லவர் என தெரியவந்ததால் ஜனனி இதற்கு மேல் ஜீவானந்தத்திற்கு உதவியாக இருப்பார் என தெரிகிறது. ஆனால் அப்பத்தாவின் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றிக்கொண்ட ரகசியம் இனிமேல் தான் எதிரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.