எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவை மறைத்து வைத்து விட்டு, ஒன்னும் தெரியாதது போல், சவுண்டு விட்டு ஜனனியிடம் சிக்கியுள்ளார் குணசேகரன். இதுகுறித்த புரோமோ தான், தற்போது வெளியாகியுள்ளது.
'எதிர்நீச்சல்' சீரியலில் நேற்றைய தினம், கதிர் முதல் முறையாக அவருடைய அண்ணன் குணசேகரனுக்கு எதிராக பேசுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில்... அண்ணன் முன்பு குரலை உயர்த்துவது போல் பேசி நடித்துவிட்டு, பின்னர் நீங்கள் நந்தினியை அடிக்க கை ஓங்கி இருக்கக் கூடாது, கழுத்தை நெருச்சி கொன்னு போட்டு இருக்கணும் என்று பேசி செம்ம ஷாக் கொடுத்தார்.
இந்த காட்சிக்கு பின்னர், எப்போதுமே கதிர் திருந்தவே மாட்டார் போல என ரசிகர்கள் பலரும் கடுப்பாகி ஒரு பக்கம் கமெண்ட் போட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து இன்றைய எபிசோடில், ஜனனியிடம் குணசேகரன் வசமாக சிக்கிய சம்பவம் தான் நடந்துள்ளது.
"நந்தினி, ரேணுகா, ஜனனி, ஆகியோர்... ஜீவானந்தத்தின் மனைவி குறித்து சமயலறையில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனனி, "இவங்க தான் அந்த ஜீவானந்தத்தோட மனைவியை கொன்னு இருப்பாங்க என கூறும் போது, நந்தினியும் எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது என சொல்கிறார். இதை தொடர்ந்து கதிர் ஏதோ குழப்பமான மனநிலையில் நிற்பது போன்ற காட்சிகளும் காட்டப்படுகிறது. பின்னர் குணசேகரன் அனைவரிடமும் இதனை பேர் இருந்தும் அந்த கிழவி காணும்னா என்ன அர்த்தம் என்று வழக்கம் போல் சட்டம் போட்டு கொண்டிருக்கிறார்.
இதற்கு ரேணுகா... "உங்க தம்பியை கூட தான் காணோம். அவர சம்பவம் பண்ண அனுப்பி விட்டுட்டு திரியுறீங்களா என கேள்வி எழுப்புகிறார். உடனே ஜனனி இதற்கு பின்னணியில் குணசேகரன் தான் இருக்க வேண்டும் என்பதை கண்டுபிடித்து, என்ன பண்ணுனீங்க அப்பதாவ என கேள்வி எழுப்ப, குணசேகரன் உறைந்து போய் நிற்கிறார். இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிந்துள்ளது. அப்பத்தா உண்மையில் காணாமல் போய்விட்டாரா? அல்லது அவரை குணசேகரன் பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஏதேனும் செய்து விட்டாரா என்பது இன்றைய எபிசோட் மூலம் தெரியவரும்.