'பிக்பாஸ்' நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக புதிய புரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் 7-ஆவது சீசன் துவங்க உள்ளது. இதுவரை பிக்பாஸ் துவங்கும் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அவ்வப்போது விதவிதமான புரோமோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை தூண்டி வருகிறது விஜய் டிவி.
ஏற்கனவே கமல்ஹாசன் தோன்றிய 2 ப்ரோமோ வெளியான நிலையில், தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. குறிப்பாக 2-ஆவது புரோமோவில், உலக நாயகன் டபுள் ஆக்க்ஷனில் தோன்றி... இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் விளையாட போவதை உறுதி செய்தார். ஆனால் அதிலும் மக்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளது. இதுகுறித்து பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில் இது குறித்து தான் கமல் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் பேசியுள்ளார்.
இரண்டு மாடி.. அதிரடியாக களமிறக்கப்படும் பொம்பள பிக்பாஸ்? இது நம்ப லிஸ்டுலையே இல்ல பாஸ்!
ஒரு கமல், இந்த முறை இரண்டு வீடு என்றால்... ஒரு வீடு சின்னதா இருக்குமோ என்றும், இரண்டு வீட்டிலும் 10 - 10 போட்டியாளர்களை சரி பாதியா பிரிச்சுடுவீங்களா என கேள்வி கேட்க, அதற்க்கு மற்றொரு கமல், ஒரு Clue கொடுத்த பிரிச்சு மேஞ்சிடுவீங்களே என கூறி, இந்த புரோமோவில் பேசியுள்ளார். கமல்ஹாசனின் இந்த புதிய புரோமோ நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு clue குடுத்தா பிரிச்சு மேஞ்சிருவீங்களே.. 😀
Bigg Boss Tamil.. Season 7.. விரைவில்.. 😎 | pic.twitter.com/YSn7hbjDNV