நீ பண்ணுன கிரிமினல் வேலையெல்லாம் சொல்லவா! சீரிய சக்தி... குணசேகரனின் வேற லெவல் ரியாக்ஷன்! எதிர்நீச்சல் புரோமோ!

By manimegalai a  |  First Published Sep 8, 2023, 7:50 PM IST

மாரிமுத்து மரணத்தால் ஒட்டுமொத்த 'எதிர்நீச்சல்'  சீரியல் குழுவினரும் பேரதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாக வேண்டிய, புரோமோ தாமதமாக சற்று முன்னர் வெளியானது.
 


வழக்கம்போல் இன்றைய தொடரிலும் தன்னுடைய மாஸான பர்பாமென்ஸால் மிரட்டி உள்ளார் குணசேகரன். நேற்றைய தினம் புதிதாக கம்பெனி திறக்க உள்ளதாக சக்தி, தன்னுடைய மனைவி ஜனனினயுடன் வந்து கூறிய போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார் குணசேகரன் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குணசேகரன் என்ன சொன்னாலும், தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து கம்பெனி தொடங்குவதில் சக்தி உறுதியாக உள்ளார்.

Tap to resize

Latest Videos

பணியின் போதே உயிர் நீத்த பாக்கியசாலி! மாரிமுத்து மறைவுக்கு சிம்பு, எம்.எஸ்.பாஸ்கர், கார்த்தி ஆகியோர் இரங்கல்!

சக்திக்கு உதவும் விதமாக அவரின் தாயான விசாலாட்சி தன்னுடைய அம்மா கொடுத்த சில நகைகளை அவருக்கு கொடுத்து உதவுகிறார். இதைக் கண்ட குணசேகரன் முடிவு பண்ணிட்டியா? என கேள்வி எழுப்ப "நீ சம்பாதித்த பணத்தை கொடுத்தால் நீ கேட்கலாம், ஆனா இது எல்லாம் எங்க அம்மா எனக்கு கொடுத்தது. இது சக்திக்கு தான் என கூறி அவரின் வாயை அடைக்கிறார்."

Jawan Box Office: ஹிஸ்டாரிக் காலெக்ஷன்.! முதல் நாளே பாலிவுட் திரையுலகை அதிர வைத்த 'ஜவான்' பட வசூல்!

சக்தி குணசேகரனை தொடர்ந்து எதிர்த்து பேசுவதால், ஞானம் சக்தியின் சட்டையை பிடித்து சண்டை போட, பொறுமை இழந்த சக்தி "வசதியான வாழ்க்கை வாழ இவங்ககளோட ஒட்டிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என கூறுகிறார். கதிரும் தன்னுடைய பங்குக்கு ஏய் என  குரலை உயர்த்துகிறார். இதற்கு சக்தி," நீ பண்ண கிரிமினல் வேலையெல்லாம் நான் சொல்லட்டுமா" என மிரட்ட குணசேகரன்... என்ன என்னப்பா பண்ணிட்டான் என, ஒன்னும் தெரியாதது போல் கேள்வி எழுப்பி, தன்னுடைய பார்வையாளையும், முக பாவனையாலும் ரியாக்ஷனால் ஸ்கோர் செய்துள்ளார். இது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகி உள்ளது.

click me!