நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்த முன்னை ஹீரோ..! யார் தெரியுமா..?

Published : Sep 17, 2022, 06:34 PM IST
நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்த முன்னை ஹீரோ..!  யார் தெரியுமா..?

சுருக்கம்

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'  திரைப்படத்தில், தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோ ஒருவர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.   

தனுஷ் நடிக்கும்  'கேப்டன் மில்லர்'   படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதுவரையிலான தமிழ் திரைப்படங்கள் பெற்றிடாத எண்ணிக்கையில், பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் அடுத்த கட்டமாக படத்தின் மீதான ஆவலை இன்னும் கூட்டும் வகையில், தெலுங்கு திரையுலகின் பிரபல முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் இணைந்துள்ளார். 

தெலுங்குத் திரையுலகில் தனது தொடர்ச்சியான வெற்றிகள் மூலம், முன்னணி பிரபலமாக, வெற்றிகரமான கமர்சியல் நடிகர்களில் ஒருவராகப் புகழ் பெற்றவர்  நடிகர் சந்தீப் கிஷன். தற்போது விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பெரிய பிரபலங்களுடன் இணைந்து, அவர் நடிக்கும் ‘மைக்கேல்’ படமும் பெரிய  எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திரையுலகில் அறிமுகமான ‘மாநகரம்’ படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திரைப்படத்தில் தனுஷுடன் அவர் இணைந்து பணியாற்றுவது, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த பிரமாண்ட திரைப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்: எந்த உடை போட்டாலும் சும்மா அள்ளுதே... நீல நிற palazzo-வில் வெரைட்டி போஸ் கொடுத்து மயக்கும் ராஷ்மிகா!
 

நடிகர் தனுஷின்  திரைப்படங்கள் தெலுங்கு  திரையுலகில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றதில் , அவருக்கு தெலுங்கிலும்  நல்லதொரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  தற்போது இந்த அற்புதமான நட்சத்திர நடிகர்களின் கூட்டணியில், ‘கேப்டன் மில்லர்’ தெலுங்கு பார்வையாளர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். கேப்டன் மில்லர் படம் குறித்தான இன்னும் பல ஆச்சர்யங்களை சத்ய ஜோதி பிலிம்ஸ் 
விரைவில் அறிவிக்கவுள்ளது. 

மேலும் செய்திகள்: பிரபலங்களுடன் மிக எளிமையாக நடந்த மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்..! வைரலாகும் புகைப்படங்கள்..!
 

மேலும் செய்திகள்: கட்டுக்கடங்காத கவர்ச்சி... பிகினி உடையில் சிக்கென இருக்கும் உடலை காட்டி ரசிகர்களை சூடேற்றும் சித்தி இத்னானி..!
 

“கேப்டன் மில்லர்”  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். பெரும் பாராட்டுக்களை குவித்த “ராக்கி, சாணிகாயிதம்” படங்கள் மூலம் புகழ்பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மதன் கார்க்கி வாசம் எழுத, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளார். நாகூரின் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்யவுள்ளார்.  கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!